ADDED : ஏப் 16, 2024 10:33 PM

ராஞ்சி: சுரங்க ஊழல், நில மோசடி உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் ஜாமின் மனு 23-ம் தேதிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி முதல்வராக இருந்தவர் ஹேமந்த் சோரன், இவர் மீது சுரங்க ஊழல், நிலமோசடியில் ஈடுபட்டது உள்ளிட்ட புகார்களில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து பல முறை சம்மன் அனுப்பியது. இதில் ஆஜராகவில்லை. திடீரென மாயமானார். அமலாக்கத்துறை வலைவீசி தேடி வந்த நிலையில் கடந்த மார்ச் 31-ம் தேதி கவர்னர் மாளிகை வந்த ஹேமந்த் சோரன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து கடிதத்தை கவர்னர் சி.பி. ராதாகிஷ்ணனிடம் வழங்கினார்.
சம்பய் சோரன் என்பவரை முதல்வராக நியமித்தார். பின்னர் பணமோசடி தொடர்பாக அமலாக்கத்துறை ஹேமந்த் சோரனை கைது செய்து தங்களது காவலில் வைத்துள்ளது.
இந்நிலையில் ஜாமின் கோரி ஹேமந்த் சோரன் சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி அமலாக்கத்துறை பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி விசாரணையை 23-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

