பட்ஜெட் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி கோரி ஹேமந்த் சோரன் மனு
பட்ஜெட் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி கோரி ஹேமந்த் சோரன் மனு
ADDED : பிப் 22, 2024 02:30 AM

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க அனுமதி கோரி முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் கோர்ட்டில் மனு செய்துள்ளார்.
ஜார்க்கண்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன், இவர் மீது நிலக்கரி சுரங்கம், மற்றும் நில மோடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் நடந்த பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிந்து நேரில் ஆஜராகுமாறு ஹேமந்த் சோரனுக்கு 8 முறை சம்மன் அனுப்பியது.ஆஜாராக நிலையில் கடந்த ஜன.31ம் தேதி கவர்னரை சந்தித்து முதல்வர் பதவியிலிருந்து விலகுவதாக கடிதம் அளித்தார்.
உடனே அமலாக்கத்துறையின் பிடியில் சிக்கினார். இவரது கோர்ட் காவல் பல முறை நீட்டிக்கப் பட்ட நிலையில் மீண்டும் ராஞ்சி பி.எம்.எல்., சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படார். அவரை பிப்.22 வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து ஹேமந்த் சோரன் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து அதே கோர்ட்டில் தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என மனு செய்தார். ஹே மந்த் சோரன் சார்பில் அவரது வழக்கறிஞர் ராஜிவ் ரஞ்சன் ஜாமின் மனுவை தாக்கல் செய்தார்.
இந்நிலையில் கோர்ட் காவல் இன்று நிறைவடைய உள்ள நிலையில் ஜார்க்கண்ட் மாநில சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் தன்னை பங்கேற்க அனுமதி கோரி மனு செய்துள்ளார். இவரது மனு இன்று விசாரணைக்கு வருகிறது.