sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வாடகை வீட்டில் ரகசிய கேமரா: வீட்டு உரிமையாளர் மகன் சிக்கினார்

/

வாடகை வீட்டில் ரகசிய கேமரா: வீட்டு உரிமையாளர் மகன் சிக்கினார்

வாடகை வீட்டில் ரகசிய கேமரா: வீட்டு உரிமையாளர் மகன் சிக்கினார்

வாடகை வீட்டில் ரகசிய கேமரா: வீட்டு உரிமையாளர் மகன் சிக்கினார்

6


ADDED : செப் 25, 2024 04:44 AM

Google News

ADDED : செப் 25, 2024 04:44 AM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி : டில்லியில் வாடகை வீட்டின் படுக்கை அறை, குளியல் அறை ஆகியவற்றில் ரகசிய கேமராக்களை பொருத்தியிருந்த வீட்டு உரிமையாளர் மகன் கைது செய்யப்பட்டார்.

கிழக்கு டில்லி ஷகர்பூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்த இளம்பெண், ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார். வெளியூர் செல்லும்போது வீட்டுச் சாவியை, வீட்டு உரிமையாளர் மகன் கரண், 30, என்பவரிடம் கொடுத்து விட்டுச் செல்வார்.சமீபநாட்களாக தன் 'வாட்ஸாப்' செயலியில் சில சந்தேகத்திற்கிடமான தகவல்கள் வந்ததால் சந்தேகம் அடைந்தார். தன் வாட்ஸாப் செயலியுடன் இணைக்கப்பட்ட பிற சாதனங்கள் குறித்து ஆராய்ந்தார்.

அவரது வாட்ஸாப் கணக்கு வேறு ஒரு லேப்டாப் வழியாக கண்காணிக்கப்படுவதை அறிந்தார். இதையடுத்து, அந்த லேப்டாப் இணைப்பைத் துண்டித்தார். வீடு முழுதும் ஆய்வு செய்ததில், குளியலறை பல்பு ஹோல்டரில், ரகசியக் கேமரா பொருத்தப்பட்டு இருப்பதைக் கண்டுபிடித்தார்.

இதையடுத்து, போலீசில் புகார் செய்தார். போலீஸ் குழு வீடு முழுதும் சல்லடை போட்டு அலசியது. படுக்கை அறை பல்பு ஹோல்டரிலும் ரகசிய கேமரா பொருத்தப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வெளியூர் செல்லும்போதெல்லாம் அதே கட்டடத்தில் மற்றொரு தளத்தில் வசிக்கும் வீட்டு உரிமையாளர் மகன் கரணிடம் சாவியைக் கொடுத்து விட்டுச் செல்வதை போலீசாரிடம் கூறினார்.

விசாரணையில், மூன்று மாதங்களுக்கு முன் ரகசிய கேமராக்களை படுக்கையறை மற்றும் குளியலறையில் பொருத்தியதை ஒப்புக் கொண்டார். கரண் பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை சேமித்து வைத்த இரண்டு லேப் - டாப்களை அவரிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட கரண், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மாற்றுத் திறனாளியும், பட்டதாரியுமான கரண், ஏழு ஆண்டுகளாக அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் எழுதி வருகிறார்.






      Dinamalar
      Follow us