sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மாணவர்களை துன்புறுத்தும் பள்ளி அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

/

மாணவர்களை துன்புறுத்தும் பள்ளி அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

மாணவர்களை துன்புறுத்தும் பள்ளி அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

மாணவர்களை துன்புறுத்தும் பள்ளி அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி


ADDED : ஏப் 17, 2025 09:39 PM

Google News

ADDED : ஏப் 17, 2025 09:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்தியா கேட்:'மாணவர்களை அவமதித்த பள்ளி மூடப்பட வேண்டியதே' என, டில்லி உயர் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

துவாரகா பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்று நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதல் கட்டணம் வசூலித்ததாக புகார் உள்ளது. கூடுதல் கட்டணத்தை செலுத்தாத மாணவர்களை அப்பள்ளி நிர்வாகம், அவமதித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து விசாரித்த என்.சி.பி.சிஆர்., எனும் தேசிய குழந்தைகள் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம், சம்பந்தப்பட்ட பள்ளி மீது குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புக்கான சிறார் நீதி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யும்படி துணை காவல் ஆணையருக்கு கடந்த ஆண்டு 18ம் தேதி உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பள்ளி நிர்வாகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. முந்தைய விசாரணையின்போது, என்.சி.பி.சிஆர்., உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

அத்துடன் மாணவர்களின் புகார் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட கலெக்டர் தலைமையில் எட்டு பேர் கொண்ட குழுவை உயர் நீதிமன்றம் அமைத்தது.

இந்த குழு ஆய்வு செய்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

* கட்டணம் செலுத்தாத மாணவர்கள் அவமானப்படுத்தப்பட்டனர்

* அவர்கள் பாரபட்சமான நடவடிக்கைகளை எதிர்கொண்டனர்

* நுாலகத்தில் மாணவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்

* வகுப்புகளுக்குச் செல்ல அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது

* நண்பர்களுடன் பேச அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது

* கேன்டீன்களுக்கும் செல்ல அனுமதி இல்லை

* கழிப்பறைக்குச் செல்ல காவலாளியால் கண்காணிக்கப்பட்டனர்.

இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நேற்று முன்தினம் நீதிபதி சச்சின் தத்தா முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. பள்ளி சீருடையில், புத்தக பைகளுடன் பல மாணவர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளை பார்வையிட தங்கள் பெற்றோருடன் வந்திருந்தனர்.

அப்போது எட்டு பேர் அறிக்கையை ஆய்வு செய்து நீதிபதி நேற்று முன் தினம் பிறப்பித்த உத்தரவு:

கட்டணத் தகராறில் மாணவர்களை நுாலகத்தில் அடைத்து வைத்து, வகுப்புகளுக்குச் செல்லவோ அல்லது சகாக்களுடன் தொடர்பு கொள்ளவோ அனுமதிக்காமல் அவமானப்படுத்தியதற்காக இந்த பள்ளி ஒரு நாள்கூட திறந்திருக்கக்கூடாது.

மாணவர்களை சக ஊழியர்களைப் போல நடத்திய பள்ளி, மூடப்பட வேண்டியதே.

மாணவர்களை பணம் சம்பாதிக்கும் இயந்திரம் போல நடத்தி வரும் பள்ளியால் மாணவர்கள் சித்திரவதை செய்யப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.

மாணவர்களை நீங்கள் (பள்ளி நிர்வாகம்) மோசமாகவும் மனிதாபிமானமற்ற முறையிலும் நடத்துவது குறித்து நான் கவலைப்படுகிறேன். கட்டணம் செலுத்தப்படவில்லை என்று வைத்துக் கொண்டால், நீங்கள் நடவடிக்கை எடுக்க உரிமை உண்டு.

ஆனால் நிச்சயமாக, இந்த முறையில் இல்லை. இந்த விவாகரத்தில் என்ன நடக்கிறது?

கட்டணம் செலுத்தாத மாணவர்களை இவ்வளவு அவமானமாக நடத்துவதற்காக பள்ளிக்கு உரிமம் வழங்கப்படவில்லை.

இது என்ன மாதிரியான நடத்தை? இத்தகைய பள்ளி ஒரு நாள் கூட திறக்கத் தகுதியற்றது. இது குறித்து கல்வித் துறை முழுமையான விசாரணை நடத்த வேண்டும்.

நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்கிறீர்கள்? அரசு உடனடியாக இந்த பள்ளியைக் கையகப்படுத்த வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதியிடம் அரசு வழக்கறிஞர், 'பள்ளி அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அங்கீகாரத்தை ரத்து செய்ய கல்வித்துறை பரிந்துரைத்துள்ளது' என, தெரிவித்தார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி தொடர்ந்து கூறியதாவது:

மாணவர்களை நுாலகத்திற்குள் அடைத்து வைப்பதைத் தவிர்த்து, வகுப்புகளுக்குச் செல்ல பள்ளி நிர்வாகம் அனுமதிக்க வேண்டும்.

மாணவர்களை இவ்வளவு அவமானப்படுத்தியதற்காக பள்ளியின் முதல்வர் மீது நீங்கள் (அரசு) குற்றவியல் வழக்குத் தொடர வேண்டும்.

எந்தவொரு மாணவருக்கும் எந்த வகையிலும் பாகுபாடு காட்டப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த பள்ளியில் சம்பந்தப்பட்ட துறை மற்றும் மாவட்ட நீதிபதி வழக்கமான ஆய்வு செய்ய வேண்டும். ஏதேனும் மீறல் ஏற்பட்டால், பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி, என்.சி.பி.சிஆர்., உத்தரவுக்கு எதிராக பள்ளி நிர்வாகம் தொடர்ந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை மே 5ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.






      Dinamalar
      Follow us