sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

எல்லாத்துக்கும் ஒரு லிமிட் வேணும்; சுற்றுலா பயணிகள் வருகையை கட்டுப்படுத்த கேரளா ஐகோர்ட் உத்தரவு!

/

எல்லாத்துக்கும் ஒரு லிமிட் வேணும்; சுற்றுலா பயணிகள் வருகையை கட்டுப்படுத்த கேரளா ஐகோர்ட் உத்தரவு!

எல்லாத்துக்கும் ஒரு லிமிட் வேணும்; சுற்றுலா பயணிகள் வருகையை கட்டுப்படுத்த கேரளா ஐகோர்ட் உத்தரவு!

எல்லாத்துக்கும் ஒரு லிமிட் வேணும்; சுற்றுலா பயணிகள் வருகையை கட்டுப்படுத்த கேரளா ஐகோர்ட் உத்தரவு!

6


UPDATED : செப் 07, 2024 08:47 AM

ADDED : செப் 07, 2024 08:29 AM

Google News

UPDATED : செப் 07, 2024 08:47 AM ADDED : செப் 07, 2024 08:29 AM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம்: மலை வாசஸ்தலங்களுக்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஒவ்வொரு சுற்றுலா மையத்திலும் தினமும் அதிகபட்சம் எத்தனை பேரை அனுமதிக்கலாம் என்பதை நிர்ணயிக்கவும் கேரளா அரசுக்கு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்மையில் வயநாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் முண்டக்கை, சூரல்மலை ஆகிய இரு கிராமங்கள் மண்ணில் புதைந்தன. இதில், 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து, இயற்கை பேரிடர் தடுப்பு குறித்தும், சுற்றுலாப்பயணிகள் வருகையை முறைப்படுத்த கோரியும், மலை வாசஸ்தலங்களுக்கு அதிகம் பேர் செல்வதை தடுக்க கோரியும் கேரளா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை நீதிபதிகள் ஏ.கே.,ஜெயசங்கரன் நம்பியார் மற்றும் சியாம் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுகள் பின்வருமாறு:

* கேரள மலை வாசஸ்தலங்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், வாகனங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். எத்தனை பேர் அதிகபட்சம் வரலாம் என்பதற்கான எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட வேண்டும்.

சுற்றுலாப்பயணிகளின் கட்டுப்பாடற்ற வருகையும், அதையொட்டி சுற்றுலா மையங்களில் நடக்கும் கட்டுப்பாடற்ற வளர்ச்சியும் மலைவாசஸ்தலங்களுக்கு பேராபத்தை ஏற்படுத்துகின்றன. எனவே, பயணிகள் வருகையை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.

அதேபோல, பாதுகாக்கப்பட்ட பகுதிகள், வனப்பகுதிகளுக்கு தினமும் எத்தனை பேரை அனுமதிக்கலாம் என்பதற்கும் அதிகபட்ச வரையறை நிர்ணயிக்க வேண்டும்.

* மலைப்பகுதிக்கு சுற்றுலா வரும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அக்டோபர் 25ம் தேதிக்குள் கட்டுப்பாடுகள் நிர்ணயம் செய்ய வேண்டும்.

* சீசன் மற்றும் சீசன் இல்லாத காலங்களில் சுற்றுலா வரும் வாகனங்களின் எண்ணிக்கை, பயணிகள் தங்குமிடம், பார்க்கிங் வசதிகள், தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்கிறதா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்.

* இந்த தகவல்களை ஒவ்வொரு மலை வாசஸ்தலம், சுற்றுலா மையத்துக்கும் தனித்தனியாக மாவட்ட நிர்வாகம் சேகரிக்க உத்தரவிடப்பட வேண்டும். அந்தந்த மாவட்ட நிர்வாகத்தினர், இந்த தகவல்களை சேகரித்து, மாநில அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.அவற்றை பெற்று, அக்டோபர் 25ம் தேதி அல்லது அதற்கு முன்பாக உயர்நீதிமன்றத்தில் மாநில அரசு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us