ADDED : ஜூலை 20, 2025 11:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொச்சி: நீதித்துறை செயல்பாடுகளில் ஏ.ஐ., பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு விதிக்கும் வகையில் கேரள உயர் நீதிமன்றம் கொள்கை வகுத்துள்ளது. இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது தொடர்பாக தனிக் கொள்கை வகுப்பது இதுவே முதல் முறை.
கேரளாவில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களுக்கு இந்த வழிகாட்டு கொள்கை தொடர்பான ஆவணங்களை உயர் நீதிமன்றம் அனுப்பி வைத்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
சில குறிப்பிட்ட விஷயங்களுக்காக மட்டுமே இவற்றை பயன்படுத்த வேண்டும். முக்கிய முடிவுகளை எடுப்பதற்கோ, சட்ட பகுப்பாய்வுகளுக்கோ நிச்சயம் பயன்படுத்தக் கூடாது. இந்த கொள்கையை மீறுவது ஒழுங்கு நடவடிக்கைக்கு வழிவகுக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

