sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தனி நீதிபதி உத்தரவுக்கு ஐகோர்ட் தடை; வெளியாகிறது 'தி கேரளா ஸ்டோரி - 2'

/

தனி நீதிபதி உத்தரவுக்கு ஐகோர்ட் தடை; வெளியாகிறது 'தி கேரளா ஸ்டோரி - 2'

தனி நீதிபதி உத்தரவுக்கு ஐகோர்ட் தடை; வெளியாகிறது 'தி கேரளா ஸ்டோரி - 2'

தனி நீதிபதி உத்தரவுக்கு ஐகோர்ட் தடை; வெளியாகிறது 'தி கேரளா ஸ்டோரி - 2'

2


ADDED : பிப் 28, 2026 01:15 AM

Google News

2

ADDED : பிப் 28, 2026 01:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம்: தி கேரளா ஸ்டோரி - 2 திரைப்படத்துக்கு எதிராக, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு கேரள உயர் நீதிமன்றம் தடை விதித்ததை அடுத்து, அப்படத்தை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன.

கேரளாவைச் சேர்ந்த நர்சிங் மாணவியர் மூளைச்சலவை செய்யப்பட்டு, மதம் மாற்றப்பட்டு ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் சேர்க்கப் படுவதை கதைக்களமாக கொண்டு, கடந்த 2023ல் தி கேரளா ஸ்டோரி திரைப் படம் உருவாக்கப்பட்டது.

கடும் அதிர்ச்சி


பெரும் சர்ச்சைகளையும், எதிர்ப்புகளையும் மீறி வெளியான இந்தப் படம், இரண்டு தேசிய விருதுகளை வென்றது. இதன் இரண்டாம் பாகம், தி கேரளா ஸ்டோரி - 2:- கோஸ் பியாண்ட் என்ற பெயரில் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் தயாரிக்கப்பட்டு உள்ளது. காமாக்யா நாராயண்சிங் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இதில், ஹிந்து பெண் ஒருவருக்கு, முஸ்லிம் பெண்கள் சேர்ந்து, வலுக்கட்டாயமாக மாட்டிறைச்சியை ஊட்டும் காட்சி இடம்பெற்றிருந்தது. இது, ஹிந்து அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தி கேரளா ஸ்டோரி - 2 திரைப்படம், நாடு முழுதும் திரையரங்குகளில் நேற்று வெளியாக இருந்த நிலையில், படத்தின் வெளியீட்டை நிறுத்தி வைக்கக் கோரி, கேரள உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதை விசாரித்த தனி நீதிபதி, படம் தொடர்பான அனைத்து வழக்குகளும் விசாரித்து முடிக்கும் வரை, 15 நாட்களுக்கு படத்தை வெளியிட இடை க்கால தடை விதித்து நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.

மேல் முறையீடு


இந்த உத்தரவை எதி ர்த்து, படத் தயாரிப்பாளர் விபுல் அம்ருத்லால் ஷா, கேரள உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்சில் மேல் முறையீடு செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு டிவிஷன் பெஞ்ச் அமர்வு தடை விதித்தது. திரைப்படத்தை வெளியிடவும் அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து, திரைப்படத்தை இன்று வெளியிடும் பணிகளில் தயாரிப்பு நிறுவனம் ஈடுபட்டுள்ளது.






      Dinamalar
      Follow us