ADDED : மே 10, 2025 08:48 PM

புதுடில்லி: பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் பிரதமரின் அரசு இல்லத்தில் நடைபெற்றது.
பஹல்காம் சம்பவத்தை தொடர்ந்து, பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கும் பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானும் டுரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் பதில் தாக்குதல் நடத்தியது. அதை இந்திய ராணுவத்தினர் வெற்றிகரமாக முறியடித்தனர். மூன்று நாட்களாக நடந்த போர், இரு தரப்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு இன்று மாலை 5 மணியுடன் முடிவுக்கு வந்தது.
போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, அடுத்த கட்ட நிலை குறித்து பிரதமரின் அரசு இல்லத்தில் மோடி தலைமையில் முக்கியமான உயர்மட்ட பாதுகாப்பு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி,
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், முப்படை தளபதிகள், மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.