உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : அக் 08, 2019 07:58 AM
ADDED : அக் 08, 2019 06:51 AM

அ நிறம் | அளவு
புதுடில்லி: நாட்டில் பண மோசடியை தடுக்கும் வகையில் 19 உறுப்பினர்கள் கொண்ட உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையில், பண மோடியை தடுக்கும் வகையில், மத்திய அரசின் வருவாய் செயலாளர் தலைமையில், நிதி சேவை மற்றும் பொருளாதார விவகாரங்கள், கார்பரேட் விவகாரம்,வெளியுறவுத்துறை விவகாரம் ஆகியவற்றிற்கான அமைச்சகத்தின் செயலாளர்கள் ,உளவுத்துறை, உள்துறை இயக்குனர்கள், செபி தலைவர், வங்கி ஒழுங்குமுறை உயரதிகாரிகள் உள்ளிட்ட 19 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவினர் பண மோசடி தடுப்பு சட்டம் 2002-ன் கீழ் விசாரணை நடத்தும் அதிகாரம் உடையவர். இவ்வாறு அந்த அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.
