ADDED : டிச 10, 2024 11:48 PM
புதுடில்லி:மசாலா பொருட்களுக்கான இந்திய ஆராய்ச்சி நிறுவனமான, ஐ.சி.ஏ.ஆர்., 'சுரசா' என்ற புதிய இஞ்சி ரகத்தை அறிமுகம் செய்துஉள்ளது.
அறிவியல் ரீதியாக இந்த இஞ்சி ரகத்தை பயிரிட்டு, ஹெக்டேருக்கு அதாவது, 2.4 ஏக்கருக்கு, 24.33 டன் மகசூல் பெற முடியும் என, ஐ.சி.ஏ.ஆர். தெரிவித்துள்ளது.
விவசாயிகள் பங்கேற்ற பயிர் வளர்ப்பு திட்டத்தின் வாயிலாக, இது உருவாக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் காய்கறிகளில் ஒன்றாக பயன்படுத்துவதற்கு என, புதிதாக உருவாக்கப்பட்ட முதலாவது இஞ்சி ரகம் இது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பாலிதீன் பைகளிலும் வளர்க்கப்படக்கூடிய இந்த சுரசா இஞ்சியை, தேவைக்கேற்ப காய வைத்து சுக்கு வடிவிலும் பயன்படுத்தலாம் என்றும், அடுத்த ஆண்டு பயிரிடும் சீசனான மே, ஜூன் மாதங்களில், விவசாயிகள் சுரசா இஞ்சி சாகுபடிக்கான உதவிகளை பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

