இந்தியாவில் அதிக வரி செலுத்தும் நிறுவனங்கள்: முதலிடம் யார் தெரியுமா?
இந்தியாவில் அதிக வரி செலுத்தும் நிறுவனங்கள்: முதலிடம் யார் தெரியுமா?
ADDED : செப் 11, 2024 02:59 PM

புதுடில்லி : இந்தியாவில் அதிக வரி செலுத்தும் நிறுவனங்களின் பட்டியலை புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டு உள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு பல கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அதிக லாபம் ஈட்டி தந்துள்ளது. இதன் மூலம் அவர்கள் அதிக வரி செலுத்தி உள்ளனர். பிஐபி (Press Information Bureau) அறிக்கையின்படி 2023 - 24 நிதியாண்டில் மொத்த கார்ப்பரேட் வருமானம் 11.32 லட்சம் கோடி வசூல் ஆகி உள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் அதிக வரி செலுத்திய நிறுவனங்கள் குறித்த பட்டியலை புளூம்பெர்க் வெளியிட்டு உள்ளது. இப்பட்டியலில் ரிலையன்ஸ் முதலிடத்தில் உள்ளது. 10வது இடத்தில், ஆக்சிஸ் வங்கி உள்ளது.
பட்டியல் பின்வருமாறு
ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.20,713 கோடி
எஸ்பிஐ வங்கி - ரூ.17,649 கோடி
எச்டிஎப்சி வங்கி - ரூ.15,350 கோடி
டிசிஎஸ் - ரூ.14,604 கோடி
ஐசிஐசிஐ வங்கி-ரூ.11,793 கோடி
ஓஎன்ஜிசி - ரூ.10,273 கோடி
டாடா ஸ்டீல்- ரூ.10,160 கோடி
கோல் இந்தியா - ரூ.9,876 கோடி
இன்போசிஸ் - ரூ.9,214 கோடி
ஆக்சிஸ் வங்கி- ரூ.7.703 கோடி வரி செலுத்தி உள்ளது.

