sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஊக்க மருந்து உட்கொள்ளும் மலை நாடு கபடி விளையாட்டு வீரர்கள்

/

ஊக்க மருந்து உட்கொள்ளும் மலை நாடு கபடி விளையாட்டு வீரர்கள்

ஊக்க மருந்து உட்கொள்ளும் மலை நாடு கபடி விளையாட்டு வீரர்கள்

ஊக்க மருந்து உட்கொள்ளும் மலை நாடு கபடி விளையாட்டு வீரர்கள்


ADDED : ஜன 02, 2025 08:42 PM

Google News

ADDED : ஜன 02, 2025 08:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நமது நிருபர் -

கர்நாடகாவின் மலை நாடு மாவட்டங்களில் உள்ள சில கபடி விளையாட்டு வீரர்கள், உடல் எடை அதிகரிக்கவும், குறைக்கவும் 'ஊக்க மருந்து'கள் உட்கொள்வதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

கர்நாடகாவில் விளையாட்டு போட்டி என்றால், முதலில் அனைவரின் நினைவுக்கும் கிரிக்கெட் தான் வரும். அதன் பின்னரே, இந்திய விளையாட்டான ஹாக்கி, கபடி போட்டிகள் வரும். இதில் கபடி போட்டி, கிரிக்கெட் போன்றே நாட்டு மக்களிடையே வரவேற்பு பெற்று வருகிறது. ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி போன்று, ஆண்டுதோறும் 'புரோ கபடி போட்டி'யும் நடத்தப்பட்டு வருகின்றன.

விரும்பும் கபடி


இத்தகைய கபடி போட்டியில், மாநிலத்தின் மலை நாடு மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி ஆகிய மாணவ - மாணவியர் விரும்பி விளையாடுகின்றனர்.

'புரோ கபடி போட்டி' போன்று, கர்நாடகாவின் 'தெற்கு மண்டலங்களுக்கான' கபடி போட்டி, தட்சிண கன்னடா மாவட்டத்தில் மூன்று ஆண்டுகளாக நடத்தப்படுகிறது. இப்போட்டி இரவு துவங்கி, அதிகாலை வரை நடக்கும்.

தங்களின் திறமையை வெளிப்படுத்தவும், தேசிய அளவில் நடக்கும் போட்டியில் பங்கேற்கவும் விரும்புகின்றனர். இதில் வெற்றி பெறுவதன் மூலம், 'புரோ கபடி போட்டி' ஏலத்தில் தேர்வாக வாய்ப்புள்ளது.

வெளி மாவட்டம்


இது தொடர்பாக சில கபடி விளையாட்டு வீரர்கள் கூறியதாவது:

கடலோர பகுதிகள், மலை பிரதேசங்களில் நடக்கும் பல விளையாட்டு போட்டிகள், வீரரின் உடல் எடையை பொறுத்து நடக்கிறது. இதற்காக உடல் எடையை குறைக்க மருந்து உட்கொள்வது அதிகரித்து உள்ளது.

மற்ற மாவட்டங்களில் இருந்த ஊக்கமருந்து பயன்படுத்தும் பழக்கம், தற்போது மலை மாவட்டங்களிலும் பரவி வருகிறது. அஜ்ஜம்புராவில் சமீபத்தில் நடந்த மாநில அளவிலான லீக் போட்டியில், சிலர் ஊக்கமருந்து பயன்படுத்தி உள்ளனர்.

இரவு முழுதும் விளையாடவும், உடலில் பலம் சேர்க்கவும் சிலர் பயன்படுத்துகின்றனர். மற்ற மாவட்டங்களுக்கு விளையாட செல்லும் வீரர்கள், அங்கு மற்ற வீரர்கள் பயன்படுத்தும் ஊக்க மருந்தை பார்த்து, இங்கும் பயன்படுத்துகின்றனர். இதை நிறுத்தாவிட்டால், வீரர்களுக்கு பெரிய பிரச்னையாக மாறும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். விளையாட்டின் போது ஏற்படும் காயத்தை விரைவில் குணமாக்கவும், வலி தெரியாமல் இருக்கவும், நீண்ட நேரம் பயிற்சியில் ஈடுபடவும் சிலர் ஊக்கமருந்து பயன்படுத்துவர். சமீபத்தில் நடந்த லீக் போட்டியின் போது, ஓய்வு அறையின் பின்புறம் பல ஊசிகள் கண்டெடுக்கப்பட்டதன் மூலம் உறுதியாகி உள்ளது.

கபடி விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் கோபிநாத் குமார் கூறுகையில், ''சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்த, வீரர்கள் தங்கள் ஆரோக்கியத்தையும், எதிர்கால வீரர்களை நினைவில் கொண்டு, ஊக்கமருந்து பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்,'' என்றார்.

தார்வாடை சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கான டாக்டர் கிரண் குல்கர்னி கூறுகையில், ''விளையாட்டு வீரர்கள் ஊக்க மருந்தை தொடர்ந்து பயன்படுத்தி கொண்டே வந்தால், மரணம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக மாரடைப்பு வரும்,'' என்றார்.

தட்சிண கன்னடா மாவட்ட போலீஸ் எஸ்.பி., யதீஷ் கூறியதாவது:

தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில், வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்துவதை தடுக்க, 'என்.ஏ.டி.ஏ., எனும் தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஏஜென்சி' உள்ளது.

ஆனால், உள்ளூர் போட்டிகளில் இதுபோன்ற ஏஜென்சி இல்லை. உள்ளூர் போலீசார் தலையிட்டாலும், வீரர் எடுக்கும் மருந்து, 'போதை மருந்துகள் மற்றும் மனநோய் பொருள்' சட்டத்தின் கீழ் வரும். எனவே, எங்களால் எதுவும் செய்ய முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஊக்க மருந்து உட்கொண்டது குறித்து எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. இதுபோன்ற பொருட்கள் பயன்படுத்துவது உண்மையாக இருந்தால், அதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து அடுத்த கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

-சுரேஷ், தலைவர்

மாநில அமெச்சூர் கபடி சங்கம்

எந்த விளையாட்டிலும் சாதனை படைத்து, ஏமாற்றுவது சரியல்ல. இளைஞர்கள் அரசின் சொத்து. ஊக்கமருந்துக்கு அடிமையாகி, வாழ்க்கையை வீணாக்கிவிடாதீர்கள்.

-ஹொன்னப்பா கவுடா

முன்னாள் சர்வதேச வீரர்

கபடி கண்டிப்பாக விளையாட வேண்டிய விளையாட்டு. தற்போது பெரும்பாலான விளையாட்டுகள் தவறாக வழி நடத்தப்படுகின் றன. நாம் அனைவரும் இயற்கை உணவை சாப் பிட்டு, கபடி விளையாடி வளர்ந்தவர்கள். செயல் திறனுக்கு ஊக்க மருந்து தேவையில்லை.

-ரமேஷ், பயிற்சியாளர், புரோ கபடி லீக்.

... புல் அவுட் ...

ஊக்க மருந்து உட்கொண்டது குறித்து எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. இதுபோன்ற பொருட்கள் பயன்படுத்துவது உண்மையாக இருந்தால், அதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து அடுத்த கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

சுரேஷ், தலைவர்,

மாநில அமெச்சூர் கபடி சங்கம்

-----------------

... புல் அவுட் ...

எந்த விளையாட்டிலும் சாதனை படைத்து, ஏமாற்றுவது சரியல்ல. இளைஞர்கள் அரசின் சொத்து. ஊக்கமருந்துக்கு அடிமையாகி, வாழ்க்கையை வீணாக்கிவிடாதீர்கள்.

ஹொன்னப்பா கவுடா

முன்னாள் சர்வதேச வீரர்

--------------

... புல் அவுட்...

கபடி கண்டிப்பாக விளையாட வேண்டிய விளையாட்டு. தற்போது பெரும்பாலான விளையாட்டுகள் தவறாக வழி நடத்தப்படுகின்றன. நாம் அனைவரும் இயற்கை உணவை சாப்பிட்டு, கபடி விளையாடி வளர்ந்தவர்கள். செயல் திறனுக்கு ஊக்க மருந்து தேவையில்லை.

ரமேஷ்,

பயிற்சியாளர்,

புரோ கபடி லீக்

***






      Dinamalar
      Follow us