
நாடு முழுதும் நடத்தப்பட்ட 18 லட்சம் சுகாதார முகாம்களில், 6.5 கோடி பெண்கள் பரிசோதனை மேற்கொண்டனர்; இது, வரலாற்று மைல்கல்லாகும். இதன் வாயிலாக, வலுவான குடும்ப கட்டமைப்பை உருவாக்கும் பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நட்டா மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், பா.ஜ.,
பொய் குற்றச்சாட்டு!
கர்நாடகாவில், காங்கிரஸ் அரசின் ஐந்து உத்தரவாத திட்டங்களால், பா.ஜ.,வினருக்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பி, மக்களை தவறாக வழிநடத்த அவர்கள் முயற்சிக்கின்றனர். பா.ஜ., ஆளும் மாநிலங்கள் கூட எங்களின் நலத்திட்டங்களை 'காப்பி' அடிக்கின்றனர்.
சித்தராமையா கர்நாடக முதல்வர், காங்.,
வெளிநாட்டின் அழுத்தம்!
மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக அப்போதைய காங்., தலைமையிலான அரசு, பாகிஸ்தான் மீது போர் தொடுக்காததற்கு வெளிநாட்டு அழுத்தமே காரணம். நம் படையினரிடம் எப்போதும் வீரம் உள்ளது; ஆனால், அப்போதைய தலைமையிடம் மன உறுதி இல்லை; 2014க்கு பின் இந்நிலை மாறியது.
சம்பித் பத்ரா தேசிய செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,