ADDED : ஜன 12, 2026 12:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரேவாரி: விளையாடு பயிற்சி பெற்ற, பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய ஹாக்கி பயிற்சியாளர் கைது செய்யப்பட்டார்.
ஹரியானா மாநிலம் ரேவாரி மாவட்டத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவி, கோல் போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்த புகார்:
ஹாக்கி விளை யாட்டுக்கான பயிற்சி பெற்று வந்தேன். பயிற்சி மைதானத்தின் குளியலறையில், மூன்று ஆண்டுகளாக பயிற்சியாளர் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் நான் கர்ப்பம் அடைந்தேன். கடந்த, 5ம் தேதி கருச்சிதைவு ஏற்பட்டது. உடல்நிலை மோசமடைந்ததையடுத்து என் பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்தனர். பயிற்சியாளர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ரேவாரி போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து, ஹாக்கி பயிற்சியாளரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

