ராமர் கோவில் திறப்பு விழா நாளில் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை?
ராமர் கோவில் திறப்பு விழா நாளில் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை?
ADDED : ஜன 08, 2024 06:57 AM
யாத்கிர்; 'அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா நடக்கும், ஜனவரி 22ல் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும்' என ம.ஜ.த., - எம்.எல்.ஏ., சரணகவுடா கந்தகூரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து, யாத்கிர் மாவட்ட நிர்வாகத்துக்கு, குருமிட்கல் தொகுதி ம.ஜ.த., - எம்.எல்.ஏ., சரணகவுடா கந்தகூரா எழுதிய கடிதம்:
அயோத்தி, இந்தியாவின் வளர்ச்சி, பாரம்பரியத்தின் அடையாளமாகும். ஸ்ரீராமனின் வழிகாட்டுதல் ஊக்கமளிக்கும். இதை, இளம் தலைமுறையினருக்கு தெரிவிக்க வேண்டும். அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா, நாட்டின் வரலாற்று வினாடிக்கு சாட்சியாகிறது.
மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அந்த அபூர்வமான நொடியை காண வேண்டும் என்பது, என் விருப்பமாகும். எனவே, ராமர் கோவில் திறக்கப்படும் ஜனவரி 22ல், பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும்.
ஸ்ரீராமச்சந்திரனின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் குறும்படத்தை, அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் ஒளிபரப்ப வேண்டும்.
அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவை, நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.