முதியோருக்கு வீட்டிலேயே சிகிச்சை பீஹாரில் துவக்கம்
முதியோருக்கு வீட்டிலேயே சிகிச்சை பீஹாரில் துவக்கம்
ADDED : ஜன 04, 2026 02:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாட்னா: பீ ஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ., கூட்ட ணி ஆட்சி நடக்கிறது. நவம்பரில் நடந்த தேர்தலில், இக்கூட்டணி மீண்டும் அமோக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது.
புதிய அரசு, 'சாத் நிஷ்சய்' எனப்படும், ஏழு உறுதிமொழிகள் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை செயல் படுத்த துவங்கி உள்ளது. இந்த திட்டம் 2015ல் முதலில் துவங்கப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக, 60 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு வீடு தேடிச் சென்று சிகிச்சை அளிக்கும் திட்டத்தை முதல்வர் நிதிஷ் குமார் நேற்று துவக்கி வைத்தார்.
முதியோருக்கு அவர்களது வீடுகளிலேயே அத் தியாவசிய சுகாதார சேவைகள் வழங்கப்படும். இதில் ரத்த பரிசோதனைகள், ரத்த அழுத்த பரிசோதனை, இ.சி.ஜி., சோதனை, பிசியோதெரபி மற்றும் அவசரகால மருத்துவ உதவிகள் அடங்கும்.

