
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லோக்சபா தேர்தலுக்கு பின், உத்தர பிரதேசத்தில் காலியாக உள்ள 10 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. அதற்கான பகுஜன் சமாஜ் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளோம். மக்கள் ஆதரவு தர வேண்டும். இடைத்தேர்தலில் வெல்வதை பா.ஜ., கவுரவ பிரச்னையாக்கி உள்ளது.
மாயாவதி, தலைவர், பகுஜன் சமாஜ்
விவசாயிகள் தற்கொலை இரட்டிப்பு!
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாக பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால், விவசாயிகளின் தற்கொலை தான் தற்போது இரட்டிப்பாகி உள்ளது. விவசாயிகளின் பிரச்னைகளை தீர்க்காத மத்திய, மாநில அரசுகளை அகற்ற வேண்டும்.
சரத் பவார், தலைவர், தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திர பவார்
தேர்தல் கமிஷனுக்கு உரிமை!
ஜம்மு - காஷ்மீரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கும். அதற்கான முன்னோட்டமாக தான் தேர்தல் கமிஷனர்கள் காஷ்மீருக்கு வந்து அனைத்து கட்சிகளுடன் பேச்சு நடத்தி சென்றுஉள்ளனர். காஷ்மீருக்கான தேர்தல் தேதியை முடிவு செய்யும் பிரத்யேக அதிகாரம் தேர்தல் கமிஷனுக்கு உள்ளது.

