ADDED : மார் 08, 2024 01:02 AM

புதுடில்லி, உலக அளவில் சிறந்த காபிக்கள் பட்டியலில், 'பில்டர் காபி' இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
ஐரோப்பிய நாடான குரேஷியாவைச் சேர்ந்த 'டேஸ்ட்அட்லஸ்' என்ற அமைப்பு, உலக அளவில் சிறந்த உணவுப் பொருட்கள் குறித்த ஆய்வுகளை செய்து வருகிறது.
இந்த அமைப்பு, உலகின், 38 சிறந்த காபி என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் கியூபாவின் கியூபன் எஸ்பிரசோ, முதலிடத்தைப் பிடித்துள்ளது. நம் நாட்டின் தென் மாநிலங்களில் பிரபலமான பில்டர் காபி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
கியூபன் எஸ்பிரசோ, நன்கு வறுக்கப்பட்ட காபிக் கொட்டைகளுடன், இயற்கையான பிரவுன் சர்க்கரை சேர்க்கப்பட்டதாகும். நுரை பொங்கும் இந்த காபி, எஸ்பிரசோ என்ற இயந்திரத்தின் வாயிலாக தயாரிக்கப்படுகிறது.
இந்திய பில்டர் காபி என்பது, வறுக்கப்பட்ட காபிக் கொட்டையை துாளாக்கி, 'டிகாக் ஷன்' எனப்படும் திரவமாக மாற்றப்படுகிறது.
பால் மற்றும் சர்க்கரையுடன் சேர்த்து பரிமாறப்படுகிறது. பில்டர் காபி என்பது தென் மாநிலங்களின் பாரம்பரியத்துடன் இணைந்தது. இந்த பட்டியலில் கிரீசின், 'எஸ்பிரஸ்சோ' என்ற காபி, மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

