தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ மருத்துவமனையில் தீ  தப்பிய நோயாளிகள்

மருத்துவமனையில் தீ  தப்பிய நோயாளிகள்

மருத்துவமனையில் தீ  தப்பிய நோயாளிகள்


ADDED : செப் 20, 2024 05:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 20, 2024 05:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சதாசிவ நகர்: பெங்களூரில் எம்.எஸ்.ராமையா மருத்துவமனையில், நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் இல்லை.

பெங்களூரு சதாசிவநகரில் எம்.எஸ்.ராமையா என்ற தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையின் 3வது மாடியில் இதயம் தொடர்பான நோய்க்கு, சிகிச்சை அளிக்கும் பிரிவு உள்ளது. நேற்று மதியம் 1:25 மணிக்கு, மூன்றாவது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

அந்த மாடியில் இருந்த, நோயாளிகள் அலறி அடித்து இரண்டாவது தளத்திற்கு சென்றனர்.

தீ விபத்து பற்றி, தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

யாருக்கும் காயமோ, உயிர்சேதமோ ஏற்படவில்லை. 'ஏசி'யில் ஏற்பட்ட, மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

சதாசிவநகர் போலீசார், மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us