sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

2 நாட்களில் பயங்கரவாதிகள் 9 பேரின் வீடுகள் தரைமட்டம்; பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை

/

2 நாட்களில் பயங்கரவாதிகள் 9 பேரின் வீடுகள் தரைமட்டம்; பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை

2 நாட்களில் பயங்கரவாதிகள் 9 பேரின் வீடுகள் தரைமட்டம்; பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை

2 நாட்களில் பயங்கரவாதிகள் 9 பேரின் வீடுகள் தரைமட்டம்; பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை

25


ADDED : ஏப் 27, 2025 10:32 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 10:32 AM

25


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் கடந்த இரண்டு நாட்களில் பயங்கரவாதிகள் 9 பேரின் வீடுகளை இடித்து தரைமட்டம் ஆக்கி பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடந்த 22ம் தேதி ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் என்ற இடத்தில், பாகிஸ்தான் ஆதரவு லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக, சந்தேகப்படும் பயங்கரவாதிகளின் வீடுகளை பாதுகாப்பு படையினர் இடித்து தரைமட்டமாக்கி வருகின்றனர்.

இரண்டு நாட்களில் பயங்கரவாதிகள் 9 பேரின் வீடுகளை இடித்து தரைமட்டம் ஆக்கி பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன் வரும் பின்வருமாறு:

* குப்வாரா மாவட்டம், கலாரூஸில், தற்போது பாகிஸ்தானில் இருப்பதாக நம்பப்படும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி பரூக் அகமதுவின் வீடு பாதுகாப்புப் படையினரால் இடித்துத் தள்ளப்பட்டது.

* ஷோபியன் மாவட்டத்தில் பயங்கரவாதி முகமது ஷபியின் மகன் அட்னான் சபி வீடு இடிக்கப்பட்டது.

* பந்திப்பேராவில் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய பயங்கரவாதியான ஜமீல் அகமது ஷீர் வீடு இடிக்கப்பட்டது.

* புல்வாமா மாவட்டம் காசிபோரா ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு பயங்கரவாதி அமீர் நசீர் வானியின் வீடு இடிக்கப்பட்டது.

*ஷோபியனின் சோட்டிபோரா கிராமத்தில், லஷ்கர்-இ-தொய்பா தளபதி ஷாஹித் அகமது குட்டேவின் வீடு வெடி வைத்து தகர்க்கப்பட்டது.

* குல்காம் பகுதியில் பயங்கரவாதி ஜாஹித் அகமதுவின் வீடு இடிக்கப்பட்டது.

* புல்வாமா பகுதியில், அஹ்சன் உல் ஹக்கின் வீடு இடிக்கப்பட்டது.

* புல்வாமாவில் பயங்கரவாதிகள் அகமது ஷேக், ஹரிஸ் அகமது ஆகிய இரண்டு பேரின் வீடுகள் இடிக்கப்பட்டன.






      Dinamalar
      Follow us