ADDED : ஆக 09, 2025 02:53 AM

தேர்தல் தொடர்பாக ராகுல் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் விசித்திரமாக இருக்கின்றன. அவரால் மட்டும் எப்படி இப்படி யோசிக்க முடிகிறது? முறைகேடு நடந்திருந்தால், தலைமை தேர்தல் கமிஷனில் முறையிட வேண்டும்; புகார் அளிக்க வேண்டும். அதை விடுத்து ஊடகங்கள் மு ன் பொய் பேசக்கூடாது .
பூபேந்திர யாதவ் மத்திய அமைச்சர், பா.ஜ.,
இது நியாயமா?
வழக்கம் போல காங்., - எம்.பி., ராகுல் பொய் பேசி வருகிறார். அவரை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். தேர்தலில் காங்., வெற்றி பெறும் போதெல்லாம், ராகுல் அமைதியாக இருக்கிறார். தோல்வி அடைந்தால் மட்டும், தேர்தலில் முறைகேடு நடந்ததாக புலம்புகிறார். இது எப்படி நியாயம்?
பிரஹலாத் ஜோஷி மத்திய அமைச்சர், பா.ஜ.,
பா.ஜ.,வின் கைப்பாவை!
மத்தியில் ஆளும் பா.ஜ.,வின் கைப்பாவையாக தேர்தல் கமிஷன் செயல்படுகிறது. நாங்கள் கேள்வி கேட்டால், சத்திய பிரமாணத்தில் கையெழுத்திடுங்கள் என, தேர்தல் கமிஷன் கூறுகிறது. ராகுல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, தேர்தல் கமிஷன் நினைத்தால் விசாரிக்கலாம். ஆனால் அவர்கள் செய்ய மாட்டார்கள். பா.ஜ.,வுக்கு மட்டுமே அவர்கள் வேலை செய்வர்.
பிரியங்கா லோக்சபா எம்.பி., - காங்.,