எப்படி இருந்த லாலு இப்படி ஆகிவிட்டார்!: நட்டா 'நச்'
எப்படி இருந்த லாலு இப்படி ஆகிவிட்டார்!: நட்டா 'நச்'
UPDATED : மே 03, 2024 11:05 AM
ADDED : மே 02, 2024 05:28 PM

பாட்னா: ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சி தலைவர் லாலு பிரசாத், எமர்ஜென்சி காலத்தில் வாரிசு அரசியல், லஞ்சம், ஊழல் பற்றியெல்லாம் பேசி யாரை எதிர்த்தாரோ இன்றைக்கு அவர்களுடன் கூட்டு வைத்துள்ளார் என பா.ஜ., தலைவர் நட்டா விமர்சித்துள்ளார்.
பீஹார் மாநிலம் அராரியாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பா.ஜ., தேசிய தலைவர் நட்டா பங்கேற்றார். அப்போது அவர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியை கடுமையாக தாக்கி பேசினார். நட்டா பேசியதாவது: 1975ல் எனக்கு 14, 15 வயது இருக்கும். அப்போது நான் ஜெயபிரகாஷ் நாராயணின் விருப்பப்படி இயக்கத்தில் சேர்ந்தேன். அப்போது லாலு பிரசாத்தை பார்த்திருக்கிறேன்.
எமர்ஜென்சி காலமான அப்போது, வாரிசு அரசியல், லஞ்சம், ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்தார். இன்று அதே லாலு பிரசாத் யாதவ், ஊழல் வழக்கில் சிக்கியுள்ளார்; யாரை எதிர்த்து குரல் கொடுத்தாரோ அவர்களுடன் கூட்டணி வைத்துள்ளார். ராஷ்ட்ரீய ஜனதா தளம் இப்போது லஞ்சம் நிறைந்த கட்சியாகிவிட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

