இந்தியா எப்படி வளர்ந்த நாடாகும்; கேள்வி கேட்ட பிபிசி தொகுப்பாளரை வாயடைக்கச்செய்த ஹர்தீப் சிங் புரி!
இந்தியா எப்படி வளர்ந்த நாடாகும்; கேள்வி கேட்ட பிபிசி தொகுப்பாளரை வாயடைக்கச்செய்த ஹர்தீப் சிங் புரி!
ADDED : ஆக 06, 2025 08:23 PM

புதுடில்லி: வரும் 2047ல் எப்படி இந்தியா வளர்ந்த நாடாகும் என்று ஏளனமாக கேள்வி எழுப்பிய பிபிசி தொகுப்பாளருக்கு தக்க பதிலடி கொடுத்து வாயடைக்கச் செய்தார், மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி.
உலகின் முன்னணி ஊடகங்களில் ஒன்றான பிபிசி, பத்திரிகை தர்மம், பேச்சு சுதந்திரம், நீதி, நேர்மை பற்றி நீட்டி முழங்கும் வழக்கம் கொண்டது. உலகுக்கே தாங்கள் தான் வழிகாட்டி என்பது போல், அவ்வப்போது பெருமை பீற்றிக்கொள்வதும், கிழக்கத்திய நாடுகளை மட்டம் தட்டிப் பேசுவதும் பிபிசிக்கு வழக்கமான ஒன்று. அத்தகைய தோரணையில், இந்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரியிடம் பேட்டி எடுத்தார், அதன் நட்சத்திர தொகுப்பாளர் ஸ்டீபன்.அவரது மட்டம் தட்டும் நோக்கம் கொண்ட கேள்விக்கு நெத்தியடி பதில் தந்தார், ஹர்தீப் சிங் புரி.
இந்நிலையில் பிபிசிக்கு அவர் பேட்டி அளித்துள்ளார்.
அப்போது ஸ்டீபன் எழுப்பிய கேள்வி: 2047ம் ஆண்டுக்குள் முழுமையாக வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்ற மிகப்பெரிய லட்சியம் நிறைவேற வேண்டுமெனில் நிலக்கரி அனல் மின் நிலையங்களிலிருந்து உற்பத்தியைப் பராமரிக்காமல் அது நடக்க வாய்ப்பில்லை; அதாவது பசுமை எரிசக்திக்கு மாறும் ஆற்றல் மாற்றத்தை நீங்கள் செய்து முடிக்கப்போவதில்லை. பருவநிலை மாற்ற நிபுணர் நந்தினி தாஸ், 'இந்தியா இன்னும் நிலக்கரியில் மிக ஆழமான கவனம் செலுத்துகிறது' என்று கூறுகிறார்
ஹர்தீப் சிங் புரி அளித்த பதில்: நீங்கள் யாரை வேண்டுமானாலும் மேற்கோள் காட்டலாம். அவர்கள் யார் என்றே எனக்குத் தெரியாது, என் விவாதங்களிலும் அவர்களுக்கு இடம் இல்லை. இந்திய வளர்ச்சியை பார்த்து மிகவும் பொறாமைப்படும் மேற்கத்திய மக்களிடமிருந்து மேற்கத்திய தொண்டு நிறுவனங்களிடம் இருந்து நிறைய பேர் உத்வேகம் பெறுகிறார்கள். அத்தகைய யாருடைய பேச்சையும் நீங்கள் மேற்கோள் காட்டலாம்.
'' இந்த வகையான மாற்றம் நடக்காது, நீங்கள் ஒருபோதும் இப்படி ஆக மாட்டீர்கள்'' என்று புதையுண்ட மனநிலை கொண்டவர்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
நீங்கள் ஒருபோதும் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற மாட்டீர்கள் என்று அவர்கள் சொன்னார்கள். இன்று இந்தியா பாரிஸ் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே நாடாக இருக்கிறது. காலநிலை மாற்றத்திலிருந்து வெளியேறும் நாடுகளைப் பற்றி விவாதிக்கும் ஒரு உலகளாவிய செய்தி ஊடகமாக நீங்கள் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேட்டி, பிபிசியில் இந்தாண்டு பிப்வரியில் ஒளிபரப்பாகியுள்ளது. இப்போது, பிரிட்டனுடன் இந்தியா வர்த்தக ஒப்பந்தம் செய்து, அமெரிக்காவுடன் மோதல் எழுந்த நிலையில், ஹர்தீப் சிங் புரி அளித்த பேட்டி வைரல் ஆகி வருகிறது.