ADDED : அக் 12, 2024 07:19 PM

புதுடில்லி: 'காங்கிரஸ், அர்பன் நக்சல்களால் இயக்கப்படும் கட்சி கிடையாது. பா.ஜ., தான் பயங்கரவாத தொடர்புடைய கட்சி' என காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
மாஹாராஷ்டிரா மாநிலம் வாசிம் மாவட்டத்தில், கடந்த 5ம் தேதி, விவசாயம் மற்றும் கால்நடைத்துறைகளில் ரூ.23 ஆயிரம் கோடி மதிப்பு திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அப்போது, 'காங்கிரஸ் கட்சியை, அர்பன் நக்சல்கள் தான் இயக்குகின்றனர்' என பிரதமர் மோடி கூறினார்.
மோடியின் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்து கார்கே கூறியதாவது:
காங்கிரஸ் அர்பன் நக்சல் கட்சி என மோடி கூறி வருகிறார். அது அவரது பழக்கம். ஆனால் அவரது பா.ஜ., எப்படி? அவர்கள் தான் அநியாயக் கொலைகளில் தொடர்புடைய பயங்கரவாத கட்சி. காங்கிரஸ் கட்சியை அவ்வாறு சொல்வதற்கு மோடிக்கு உரிமை கிடையாது.
ஹரியானா சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பின்னரும் அர்பன் நக்சல்கள் என்ற வார்த்தையை மோடி பயன்படுத்துகிறார். காங்கிரஸ் கட்சி, அர்பன் நக்சல்கள் இயக்கும் கட்சி அல்ல.
இவ்வாறு கார்கே கூறினார்.

