sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

விஜய் எத்தனை முறை மக்களை சந்தித்தார்: அண்ணாமலை கேள்வி

/

விஜய் எத்தனை முறை மக்களை சந்தித்தார்: அண்ணாமலை கேள்வி

விஜய் எத்தனை முறை மக்களை சந்தித்தார்: அண்ணாமலை கேள்வி

விஜய் எத்தனை முறை மக்களை சந்தித்தார்: அண்ணாமலை கேள்வி

15


ADDED : மார் 28, 2025 07:03 PM

Google News

ADDED : மார் 28, 2025 07:03 PM

15


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: '' நடிகர் விஜய், கட்சி ஆரம்பித்து எத்தனை முறை வெளியே வந்தீர்கள்?. எத்தனை முறை ஏசி காரை தாண்டி வெளியே வந்தீர்கள்? எத்தனை முறை மண்டபத்தில் கூட்டம் போட்டீர்கள் '' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

நிறைய தூரம்

இது தொடர்பாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது: நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ., தலைவர் நட்டா மற்றும் சந்தோஷ் ஆகியோரை சந்தித்தேன். 2026 தேர்தல், தமிழகத்திற்கு மிக முக்கியமான தேர்தல். தி.மு.க., மீது குற்றம் சுமத்துகிறோம். அவர்கள் தவறை மக்கள் முன் எடுத்து வைக்கிறோம். 2026 தேர்தல் மக்கள் நலனுக்கான தேர்தலாக பார்க்கிறோம். கூட்டணிக்கான நேரம், அவகாசம் , காலம் ரொம்ப தூரம் உள்ளது. இன்னும் 9 -10 மாதம் உள்ளது. நிறைய விஷயம் நடந்து வருகிறது.

தொண்டர்கள் கருத்து

கட்சி வளர்ச்சி முக்கியமா, தமிழக மக்களின் நலன் முக்கியமா எனக் கேட்டால், மக்களின் நலன் முக்கியமாக உள்ளது. இதை எல்லாம் பேசி உள்ளனர். மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்துகின்றனர். கூட்டணி தொடர்பாக தலைவர்கள் பேசுவார்கள். மாநில தலைவராக எனது கருத்து, ஆலோசனைகளை கூறி உள்ளேன். தமிழகத்தில் 2026ல் தி.மு.க.,வை ஆட்சியில் இருந்து இறக்க வேண்டும் என்ற தொண்டர்களின் கருத்தை தெரிவித்து உள்ளோம். கூட்டணியை பற்றி இப்போது பேச வேண்டிய அவசியமில்லை.

கட்டாயம்

தேர்தலுக்கான நேரம் காலம் ரொம்ப தூரம் உள்ளது. அடுத்தாண்டு ஏப்ரல் மே வரை அவகாசம் உள்ளது. 10 மாதம் தேர்தல் பரபரப்புக்கு உள்ளது. எங்களை பொறுத்தவரை எங்களின் கருத்துகள், தொண்டர்கள் எண்ணம், மாநில அரசியல் சூழலை கூறியுள்ளேன். மக்கள் நலனை பிரதானப்படுத்த வேண்டும் என்ற கருத்தை ஏற்கிறோம். 2026 ல் தி.மு.க., ஆட்சியில் இருந்து இறக்கப்பட வேண்டும் என்ற கருத்தையும் ஏற்கிறோம். எங்களின் எதிரி திமுக., அவர்களின் கூட்டணி. ஆட்சியில் இருந்து அவர்கள் இறக்கப்பட வேண்டும் என்பதில் தெள்ளத்தெளிவாக உள்ளோம். எந்த கட்சியுடன் இருந்தாலும் கூட்டணியை பற்றி பேச வேண்டிய நேரத்தில் நாங்கள் பேசுகிறோம். தமிழக அரசியல் களம் எப்படி இருக்கிறது. மக்கள் என்ன விரும்புகிறார்கள் என் கட்சி பிரதிபலிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

எனக்கு என தனிப்பட்ட கருத்து இல்லை. கட்சி முதன்மையானது முக்கியமனது. கட்சிக்காக நாங்கள் இருக்கிறோம். எந்த மாற்றுக்கருத்து இல்லை. பா.ஜ., மட்டும் தன் ஜனநாயகம் முறைப்படி நடக்கும். ஒரு தலைவராக இருந்தாலும் தொண்டாராக இருந்தாலும் கருத்து கேட்கப்படும். நாங்கள் ஆலோசனை சொல்வோம் மூத்த தலைவர்கள் உள்வாங்கி உள்ளனர்.

விஜய் விமர்சனம்


மக்கள் இரண்டு விஷயத்தை பார்ப்பார்கள் நாங்கள் மீனவர்களை டில்லி அழைத்து வந்து பேசுகிறோம். டாஸ்மாக் ஊழல் குறித்து பேசுகிறோம். வீதியாக போகிறோம். கைதாகிறோம். இது ஒரு அரசியல்.

கட்சி ஆரம்பித்து 3 மாதம் வரை வெளியே வருவது இல்லை. இது ஒரு அரசியல். இதை மக்கள் பார்ப்பார்கள். கட்சி ஆரம்பித்து எத்தனை முறை வெளியே வந்தீர்கள்?. எத்தனை முறை ஏசி காரை தாண்டி வெளியே வந்தீர்கள்?. எத்தனை முறை மண்டபத்தில் கூட்டம் போட்டீர்கள்?. இதையும் மக்கள் பார்ப்பார்கள். களத்தில் யாருக்கு யார் எதிரி என வாக்காளர் முடிவு செய்யட்டும். டிவியை பார்த்து அனைத்து கட்சிகளையும் பார்க்கிறார்கள்.

மக்கள் முடிவு

யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. அவரவர் கருத்தை சொல்லட்டும். தமிழக அரசியல் களத்தில் அதிகமாக கைது கைதானது பா.ஜ., தொண்டர்கள். அதிகமாக முடக்கப்பட்ட கட்சி பா.ஜ.,அதிகமுறை நீதிமன்றம் சென்று அனுமதி வாங்கி கூட்டம் நடத்தினோம்.பிரதமர் மோடி வர அனுமதி கொடுக்கவில்லை. நீதிமன்றத்தில் அனுமதி வாங்கி கோவையில் கூட்டத்தை நடத்தினோம். இதை மக்கள் பார்க்கிறார்கள். வாய்ச்சவடாலா... வெறும் பேச்சா... சினிமா வசனமா.. களத்தில் வேலையா... யாருக்கு யார் எதிரி என மக்கள் முடிவு செய்யட்டும்.

யாரிடம் கேள்வி

தி.மு.க., தவறை சுட்டிக் காட்டுவதில், போராடுவதில் பா.ஜ., முதன்மையாக உள்ளது. அரசியல் என்பது மைக் போட்டு பேசிவிட்டு கைகாட்டிவிட்டு போவது கிடையாது. களத்தில் நின்று மக்களுக்காக வேலை பார்ப்பது அரசியல்.1973 ல் தொகுதி மறுவரையறை நடந்த போது, லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை 545 ஆக உயர்த்தப்பட்டது. இதில் தமிழகத்திற்கு ஒன்றும் கிடைக்கவில்லை. அப்போது பிரதமர் ஆக இருந்த இந்திரா கூட்டிய கூட்டத்தில் முதல்வராக இருந்த கருணாநிதி கலந்து கொண்டார். அப்போது கருணாநிதி ஒரு தொகுதி கூட வாங்கித்தர முடியவில்லை. யார் மீது விஜய் குற்றம்சாட்ட வேண்டும்? அவர்களுக்கு தான் விஜய் தண்ணீர் காட்ட வேண்டும்.அரசியலில் சக்தி வாய்ந்தவரை பற்றி பேசினால் தான் கவனம் கிடைக்கும். ராகுலை பற்றியா பேச முடியும். மீடியா வெளிச்சம் காரணமாக பிரதமர் மோடி குறித்து விஜய் பேசுகிறார்.

புரிதலோடு

லாட்டரி பணத்தை மூலம் திமுக.,வில் வேலை பார்த்தவர், விசிக.,வுக்கு தாவினார். தற்போது விஜய் கட்சிக்கு மாறினார். தற்போது அவர், தவெக.,வை லாட்டரி விற்பனை கழகமாக மாற்ற வேண்டும் என்பது அவரின் திட்டம். இதற்காக விஜய் உடன் இணைந்துள்ளார். அவர் என்னை விமர்சித்து பேசுகிறார். விஜய் பேசும்போது அரசியல் புரிதலோடு பேச வேண்டும். ஊழலை உடைத்து பேசியது பாஜ., பிரச்னைகளில் மாட்டி இருப்பது பா.ஜ., ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டியது பா.ஜ., ஆனால், எங்களை தி.மு.க.,விற்கு ஆதரவாக செயல்படுகிறோம் என சொன்னால், அவர்களின் பேச்சை பார்த்து கொள்ளுங்கள்.கூட்டணி விவகாரத்தில் என்னால் பிரச்னைக்கு வராது. என்னுடைய வேலையை தொண்டனாக செய்வேன். எங்கள் கருத்துகளை தலைவர்களிடம் கூறியுள்ளோம். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.






      Dinamalar
      Follow us