தேர்தல் பத்திரம் மூலம் மாநில கட்சிகள் பெற்றது எவ்வளவு?
தேர்தல் பத்திரம் மூலம் மாநில கட்சிகள் பெற்றது எவ்வளவு?
UPDATED : மார் 15, 2024 06:14 PM
ADDED : மார் 15, 2024 06:08 PM

புதுடில்லி: தேர்தல் பத்திரம் மூலம் மாநில கட்சிகள் ரூ.5,221 கோடி  நன்கொடை திரட்டியது தேர்தல் ஆணையம் வெளியிட்ட ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் பத்திரங்கள் குறித்த விபரங்களை தேர்தல் ஆணையம் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. இதன்படி, பா.ஜ., மட்டும் 6,060.51 கோடி ரூபாய் நன்கொடை திரட்டி உள்ளது. காங்கிரஸ் ரூ.1,421.86 கோடி ரூபாயும், ஆம் ஆத்மி 65.45 கோடியும் நன்கொடை வசூலித்த நிலையில், பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் கட்சிகள் தேர்தல் பத்திரம் மூலம் எந்த நன்கொடையும் வசூலிக்கவில்லை.
மாநில கட்சிகள்
இந்நிலையில், மாநில கட்சிகள்  தேர்தல் பத்திரம் மூலம் வசூலித்த நன்கொடை குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி மாநில கட்சிகள் ரூ.5,221  கோடி ரூபாய் நன்கொடை வசூலித்து உள்ளன.  இது பாஜ., வசூலித்த தொகையை விட ரூ.839 கோடி மட்டுமே குறைவாகும்.
அதில்திரிணமுல் காங்கிரஸ் ரூ.1609.53 கோடி
பிஆர்எஸ் கட்சி ரூ.1,214.70 கோடி
பிஜூ ஜனதா தளம் ரூ.775.50 கோடி
திமுக., ரூ.639 கோடி
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ரூ.337 கோடி
தெலுங்கு தேசம் ரூ.218.88 கோடி
ராஷ்ட்ரீய ஜனதா தளம் ரூ.73.5 கோடி
மதசார்பற்ற ஜனதா தளம் ரூ.43.40 கோடி
சிக்கிம் கிராந்திகாரி கட்சி ரூ.36.5 கோடி
தேசியவாத காங்கிரஸ் கட்சி ரூ.31 கோடி
ஜனசேனா கட்சி ரூ.21 கோடி
சமாஜ்வாதி கட்சி ரூ.14.05 கோடி
ஐக்கிய ஜனதா தளம் ரூ.14 கோடி
ஜார்க்கண்ட் முத்தி மோர்ச்சா ரூ.1.3.5 கோடி
அகாலி தளம் ரூ.7.2 கோடி
அதிமுக ரூ.6.05 கோடி
சிக்கிம் ஜனநாயக முன்னணி ரூ.5.5 கோடி
மஹாராஷ்டிராவாடி கோமந்தக கட்சி, காஷ்மீர்  தேசிய மாநாட்டு கட்சி, கோவா முன்னணி கட்சி ஆகியன ரூ.1 கோடிக்கு குறைவாகவே தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை பெற்றுள்ளன.

