UPDATED : பிப் 01, 2024 04:11 PM
ADDED : பிப் 01, 2024 04:09 PM

புதுடில்லி: இன்று (பிப்.,1) தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் அதிகபட்சமாக பாதுகாப்புத்துறைக்கு ரூ.6.2 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்னும் சில மாதங்களில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் லோக்சபாவில் தாக்கல் செய்தார். அதில், மொத்தம் 9 துறைகளுக்கு தனித்தனியாக திட்டங்களை குறிப்பிட்டு, அதற்கான நிதிகளையும் ஒதுக்குவதாக அறிவித்தார். அதன்படி, அதிகபட்சமாக பாதுகாப்புத்துறைக்கு ரூ.6.2 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
துறை வாரியாக நிதி ஒதுக்கீடு
* பாதுகாப்புத்துறைக்கு ரூ.6.2 லட்சம் கோடி* சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.2.78 லட்சம் கோடி* ரயில்வேத்துறைக்கு ரூ.2.55 லட்சம் கோடி, நுகர்வோர் விவகாரங்கள்* உணவு மற்றும் பொது விநியோகத்துறைக்கு ரூ.2.13 லட்சம் கோடி* உள்துறைக்கு ரூ.2.03 லட்சம் கோடி* ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ.1.77 லட்சம் கோடி* ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறைக்கு ரூ.1.68 லட்சம் கோடி* தகவல் தொடர்புத்துறைக்கு ரூ.1.37 லட்சம் கோடி* விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறைக்கு ரூ.1.27 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.