sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஹூப்பள்ளி - ராமேஸ்வரம் ரயில் ஜூன் 29 வரை நீட்டிப்பு

/

ஹூப்பள்ளி - ராமேஸ்வரம் ரயில் ஜூன் 29 வரை நீட்டிப்பு

ஹூப்பள்ளி - ராமேஸ்வரம் ரயில் ஜூன் 29 வரை நீட்டிப்பு

ஹூப்பள்ளி - ராமேஸ்வரம் ரயில் ஜூன் 29 வரை நீட்டிப்பு


ADDED : டிச 27, 2024 05:50 AM

Google News

ADDED : டிச 27, 2024 05:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: 'பொது மக்கள் வசதிக்காக, ஹூப்பள்ளியில் இருந்து ராமேஸ்வரத்துக்கு இயக்கப்பட்ட வாராந்திர ரயில் போக்குவரத்து, 2025 ஜூன் 29ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த ரயில் மண்டபம் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும்' என, தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:

பொது மக்கள் வசதிக்காக, ஹூப்பள்ளி ஸ்ரீசித்தார்த் சுவாமிகள் ரயில் நிலையத்தில் இருந்து தமிழகம் ராமேஸ்வரத்துக்கு வாராந்திர ரயில் இயக்கப்பட்டு வந்தது. தற்போது, பாம்பன் பாலத்தில் பணிகள் நிறைவு பெறாததால், ரயில்கள் மண்டபத்தில் நிறுத்தப்படுகின்றன.

ரயில் எண் 07355: ஹூப்பள்ளி - ராமேஸ்வரம் சிறப்பு ரயில், 2025 ஜன., 4ம் தேதி முதல் சனிக்கிழமை தோறும் ஹூப்பள்ளியில் இருந்து காலை 6:50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4:25 மணிக்கு மண்டபம் சென்றடையும். இந்த ரயில் போக்குவரத்து, ஜூன் 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

மறுமார்க்கத்தில் எண் 07356: ராமேஸ்வரம் - ஹூப்பள்ளி சிறப்பு ரயில், 2025 ஜன., 5ம் தேதி முதல் ஞாயிற்றுகிழமை தோறும், மண்டபத்தில் இருந்து இரவு 9:55 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 7:40 மணிக்கு ஹூப்பள்ளி வந்தடையும்.

இந்த ரயில் போக்குவரத்து, ஜூன் 29ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில், தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சிவகங்கை ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

ரயில் எண்: 06519: எஸ்.எம்.வி.டி., - கலபுரகி சிறப்பு ரயில், இன்றும், நாளையும் எஸ்.எம்.வி.டி.,யில் இருந்து இரவு 9:15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7:40 மணிக்கு கலபுரகி சென்றடையும்.

மறுமார்க்கத்தில், எண் 06520: கலபுரகி - பெங்களூரு எஸ்.எம்.வி.டி., சிறப்பு ரயில், டிச., 28, 29 ம் தேதிகளில் கலபுரகியில் இருந்து காலை 9:35 மணிக்கு புறப்பட்டு, அன்றைய தினம் இரவு 8:00 மணிக்கு பெங்களூரு எஸ்.எம்.வி.டி.,யை வந்தடையும்.

இவ்விரு ரயில்களும், எலஹங்கா, தர்மாவரம், அனந்தபூர், குண்டக்கல், அத்தானி, மந்த்ராலயம் ரோடு, ராய்ச்சூர், கிருஷ்ணா, யாத்கிர், சஹாபாத் வழியாக இயங்கும்.

எண் 07153: ஆந்திர மாநிலம், நரசாபூர் - பெங்களூரு எஸ்.எம்.வி.டி., வாராந்திர சிறப்பு ரயில், 2025 ஜன., 3ம் தேதி முதல் மார்ச் 28ம் தேதி வரையும்; மறு மார்க்கத்தில், எண் 07154: பெங்களூரு எஸ்.எம்.வி.டி., - நரசாபூர் வாராந்திர சிறப்பு ரயில், 2025 ஜன., 4ம் தேதி முதல் மார்ச் 29ம் தேதி வரையும் இயக்கப்படும்.

இவ்வாறு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us