மஹாராஷ்டிராவில் சாய ஆலையில் பயங்கர தீ விபத்து: பல மீட்டர் உயரம் எரிந்த தீ ஜூவாலை
மஹாராஷ்டிராவில் சாய ஆலையில் பயங்கர தீ விபத்து: பல மீட்டர் உயரம் எரிந்த தீ ஜூவாலை
ADDED : செப் 06, 2025 06:43 AM

பிவாண்டி: மஹாராஷ்டிராவில் சாய ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றிய விவரம் வருமாறு:
தானே மாவட்டம் பிவாண்டி அருகே கமத்கார் என்ற பகுதி உள்ளது. இங்கு பெரிய சாய ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஆலையில் இன்று (செப்.6) அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தீ மெல்ல, மெல்ல வளாகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியது. பல மீட்டர் உயரத்துக்கு காணப்பட்ட தீ ஜூவாலைகளால் அப்பகுதியே வெப்பத்தில் தகித்தது. மின்சார வினியோகமும் முற்றிலும் தடைபட்டது.
தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினரும், உள்ளூர் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பல மீட்டர் உயரம் எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கினர்.
சிறிது நேர போராட்டத்திற்கு பின்னர் தீ முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டது. தீ விபத்து எப்படி நிகழ்ந்தது என்பதற்கான காரணம் தெரியவில்லை. இருப்பினும், மின்கசிவே காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.