லெபனானுக்கு நிவாரண பொருட்கள்:மனிதாபிமான அடிப்படையில் அனுப்பியது இந்தியா
லெபனானுக்கு நிவாரண பொருட்கள்:மனிதாபிமான அடிப்படையில் அனுப்பியது இந்தியா
ADDED : அக் 18, 2024 08:10 PM

புதுடில்லி: லெபனானில் ஹெஸ்புல்லா அமைப்பு மீது இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வந்த போதிலும், மனிதாபிமான அடிப்படையில் மருந்து பொருட்களை இந்தியா லெபனானுக்கு அனுப்பி வைத்தது.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மீது, காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்தாண்டு அக்., 7ல் தாக்குதல் நடத்தினர். இதில், 1,200 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, ஹமாஸ் பயங்கரவாதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்தது. அது, ஓராண்டை எட்டியுள்ளது.
இதற்கிடையே, ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக, அண்டை நாடான லெபனானில் இருந்து இயங்கும் ஹெஸ்பொல்லா பயங்கரவாதிகள், மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் லெபனானுக்கு இந்தியா மனிதாபிமான அடிப்படையில் 33 டன் நிவாரண பொருட்களை அனுப்பி வைக்க உள்ளது.அதன்படி முதற்கட்டமாக 11 டன் மருந்து பொருட்கள் சரக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டன. இரண்டாம் கட்டமாக அடுத்த வாரம் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெயிஸ்வால் ‛எக்ஸ்'தளத்தில் பதிவேற்றியுள்ளார்.