ADDED : மார் 24, 2025 04:50 AM
சுத்தகுண்டேபாளையா: மனைவியை கொன்று துாக்கில் தொங்கவிட்டு, தற்கொலை என்று நாடகம் ஆடிய கணவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
பெங்களூரு மாகடி சாலை தாவரகெரேயை சேர்ந்தவர் சிக்கமுத்துராஜ், 37. இவரது மனைவி ஷில்பா, 35. இவர்களுக்கு 12 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. தம்பதிக்கு 11 வயதில் மகள் உள்ளார். ஐந்து ஆண்டுகளாக சுத்தகுண்டேபாளையாவில் வசிக்கின்றனர். தனியார் மருத்துவனையில் நர்சாக ஷில்பா வேலை செய்தார். கடந்த 20ம் தேதி வீட்டின் படுக்கை அறையில், ஷில்பா துாக்கில் தொங்கினார்.
ஷில்பாவின் பெற்றோருக்கு போன் செய்த சிக்கமுத்துராஜ், குடும்ப தகராறில் உங்கள் மகள் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என, தகவல் கொடுத்துவிட்டு தலைமறைவானார். மகளை கொன்றதாக மருமகன் மீது, ஷில்பா பெற்றோர் சுத்தகுண்டேபாளையா போலீசில் புகார் செய்தனர்.
தலைமறைவாக இருந்த சிக்கமுத்துராஜ், மாகடியில் நேற்று கைது செய்யப்பட்டார். நடத்தை சந்தேகத்தால் ஏற்பட்ட தகராறில், மனைவியை தாக்கியதில் அவர் இறந்ததாகவும், போலீசில் இருந்து தப்பிக்க தற்கொலை நாடகம் ஆடியதையும் ஒப்பு கொண்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.