ADDED : ஜூன் 13, 2026 02:11 AM

பந்தலுார்: கேரளா மாநிலம், கண்ணனுாரை சேர்ந்த சிஜு, 40, கர்நாடக மாநிலம், வீராச்சிபேட்டை மல்லிகா, 33, தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். தம்பதிக்குள் கடந்த மாதம் சண்டை நடந்துள்ளது.
மல்லிகா, குழந்தைகளை அழைத்து கொண்டு, நீலகிரி மாவட்டம், பந்தலுாரில் உள்ள சித்தி பாக்கியலட்சுமி வீட்டிற்கு வந்து விட்டார்.
நேற்று முன்தினம் அங்கு வந்த சிஜு, மல்லிகாவை சமாதானம் செய்து, கேரளா, வயநாடு மேப்பாடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்று விட்டு, நேற்று மாலை காரில் பந்தலுார் திரும்பினார்.
மேங்கோரேஞ்ச் என்ற இடத்தில் வந்த போது, இருவருக்கும் தகராறு ஏற்பட, காரில் மறைத்து வைத்திருந்த கத்தியால், மல்லிகாவின் இரண்டு கால்களிலும் சிஜு வெட்டினார்.
இதில், படுகாயமடைந்த மல்லிகாவை, அவ்வழியாக சென்றவர்கள், ஊட்டி மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிஜு கைது செய்யப்பட்டார்.
