sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

3வது மனைவியிடமும் விவாகரத்து கணவருக்கு ரூ.25,000 அபராதம்

/

3வது மனைவியிடமும் விவாகரத்து கணவருக்கு ரூ.25,000 அபராதம்

3வது மனைவியிடமும் விவாகரத்து கணவருக்கு ரூ.25,000 அபராதம்

3வது மனைவியிடமும் விவாகரத்து கணவருக்கு ரூ.25,000 அபராதம்


ADDED : டிச 14, 2024 11:06 PM

Google News

ADDED : டிச 14, 2024 11:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: இரண்டு மனைவிகளை விவாகரத்து செய்துவிட்டு, மூன்றாவது மனைவியிடமும் விவாகரத்து கேட்ட கணவருக்கு, உயர்நீதிமன்றம் 25,000 ரூபாய் அபராதம் விதித்தது.

ஷிவமொக்கா நகரில் வசிக்கும் 35 வயது நபர், 2020 பிப்ரவரி 10ல், இளம்பெண்ணை திருமணம் கொண்டார்.

இத்தம்பதி ஷிவமொக்காவில் வசித்து வந்தனர். திருமணமான சில மாதங்களிலேயே மனைவியை அடித்து துன்புறுத்தினார்.

கொடுமையை தாங்க முடியாத மனைவி, தன் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். வீட்டுக்கு மீண்டும் வரும்படி, கணவர் பல முறை அழைத்தும் அவர் செல்லவில்லை.

இதற்கிடையே கணவருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் நடந்ததும், மனைவிகளை அவர் விவாகரத்து செய்திருப்பதும் இவருக்கு தெரிய வந்தது.

இதனால் கணவர் வீட்டுக்கு அவர் செல்ல மறுத்தார். இதனால் அவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கணவர் வழக்கு தொடர்ந்தார்.

விசாரணையின்போது, கணவர் தரப்பு வக்கீல், 'என் கட்சிக்காரரின் மனைவி, தன் தாய் வீட்டுக்கு சென்றார். திரும்பி வரவும், அவருடன் வாழவும் மறுக்கிறார். அவரிடம் இருந்து என் கட்சிக்காரருக்கு விவாகரத்து பெற்றுத்தர வேண்டும்' என கூறினார்.

மனைவி தரப்பு வக்கீல், 'மனுதாரர் வரதட்சணை கேட்டு, மனைவியை கொடுமைப்படுத்தினார். தனக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி, விவாகரத்து ஆனதை மூடி மறைத்து, மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இவரையும் விவாகரத்து செய்யும் நோக்கில், கொடுமைப்படுத்தி வீட்டில் இருந்து விரட்டினார்' என விவரித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், 'மனுதாரர் ஏற்கனவே இரண்டு பெண்களை, திருமணம் செய்து கொண்டார்; விவாகரத்தும் செய்துள்ளார்.

மூன்றாவது திருமணம் செய்து கொண்டு, மூன்று, நான்கு மாதங்கள் சேர்ந்து வாழ்ந்துள்ளனர். ஆனால் எத்தனை நாட்கள் சேர்ந்து வாழ்ந்தனர் என்பது குறித்து, தவறான தகவல் கொடுத்துள்ளார்.

மனைவி தன்னை மோசமான முறையில் நடத்தியதாக, விவாகரத்து கேட்கும் கணவர், அதற்கான சாட்சி, ஆதாரங்களை அளிக்கவில்லை. எனவே தம்பதியின் புனிதமான பந்தத்தை பிரிக்க முடியாது' என தீர்ப்பளித்தது.

மனுத்தாக்கல் செய்து, நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்கிய கணவருக்கு, 25,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us