ADDED : ஆக 30, 2025 06:35 AM
திருவனந்தபுரம்; கேரள மாநிலம் கண்ணூர் கல்லாலம் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம ராஜன் 75. மனைவி ஸ்ரீலேகா 69. இவர் கேரள வனத்துறை அமைச்சர் சுரேந்திரனின் சகோதரி மகள் ஆவார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் வெளிநாடுகளில் பணியாற்றி வருகின்றனர்.
கார் டிரைவர் சரோஸ் பிரேமராஜனின் வீட்டுக்கு வந்தபோது வீடு உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது. அழைப்பு மணியை அடித்தும் கதவு திறக்கப்படவில்லை. வீட்டு கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது இருவரும் படுக்கை அறையில் இறந்து கிடந்தனர்.
ஸ்ரீலேகாவின் தலையில் இருந்து ரத்தம் வழிந்திருந்தது. அவரது உடல் தீயில் பாதி எரிந்த நிலையில் காணப்பட்டது. பிரேமராஜன் உடல் முற்றிலுமாக கருகிய நிலையில் கிடந்தது. படுக்கை அறையில் சுத்தியல் கண்டெடுக்கப்பட்டது. ஸ்ரீலேகாவை சுத்தியலால் அடித்து கொலை செய்துவிட்டு கியாஸ் சிலிண்டரை திறந்து விட்டு தீ வைத்து கணவர் பத்மராஜன் தற்கொலை செய்திருப்பதாக போலீசார் கருதுகின்றனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.