ADDED : மார் 16, 2025 11:28 PM

மைசூரு: ''எனக்கு முதல்வர் பதவி கொடுத்தால், சிறப்பாக நிர்வகிப்பேன்,'' என காங்கிரஸ் எம்.எல்.ஏ., தன்வீர் செய்ட் தெரிவித்தார்.
மைசூரில் அவர் அளித்த பேட்டி:
யாருக்குதான் முதல்வராக வேண்டும் என்ற ஆசை இருக்காது. எனக்கும் கூட முதல்வராக வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. பதவி கொடுத்தால் சிறப்பாக நிர்வகிப்பேன்.
முதல்வர் என்பது ஒரு பதவி அல்ல. மாநிலத்தின் திக்கு, திசையை காட்டும் பதவியாகும். எனவே அந்த பதவியை பற்றி விவாதிக்க மாட்டேன்.
மாநிலத்தில் முதல்வரை மாற்றும் வரை, சித்தராமையாவே முதல்வராக நீடிப்பார். அந்த பதவியில் இருப்பவருக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். முதல்வர் மாற்றம் இருக்கும், இருக்காது என்பதை பற்றி, நாங்கள் கூற முடியாது, இது குறித்து மேலிடம் முடிவு செய்யும்.
எனக்கு அமைச்சராக வேண்டும் என, ஆசையாக உள்ளது. ஆனால் ஒரு அமைச்சர் இடமும் காலியாக இல்லை.
எனக்கு அமைச்சர் பதவி கொடுத்தால், நல்ல முறையில் நிர்வகிப்பேன். யாருக்கும், எதுவும் நிரந்தரம் அல்ல. எந்த பதவியும் நிரந்தரம் அல்ல.
துணை முதல்வர் சிவகுமார், காங்கிரஸ் நெருக்கடியான சூழ்நிலையில் இருந்த போது, தலைவர் பொறுப்பேற்று கட்சியை முன்னடத்துகிறார்.
கட்சியை ஆட்சியிலும் அமர்த்தி உள்ளார். மாநில தலைவர் பதவி போட்டியில், நான் இல்லை. தொண்டரை போன்று பணியாற்றுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.