அரசியலில் நான் 'பேமஸ்'; சினிமாவில் நான் 'ஆவரேஜ்': பவன் கல்யாண் ஓபன் டாக்!
அரசியலில் நான் 'பேமஸ்'; சினிமாவில் நான் 'ஆவரேஜ்': பவன் கல்யாண் ஓபன் டாக்!
ADDED : ஜூலை 21, 2025 03:45 PM

ஆந்திர மாநில துணை முதல்வராக இருக்கும் பவன் கல்யாண் நடித்து இந்த வாரம் ஜுலை 24ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது 'ஹரிஹர வீரமல்லு'. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று காலை ஹைதராபாத்தில் நடைபெற்றது. இன்று மாலை வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இன்று காலை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தன் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் பற்றி வெளிப்படையாகப் பேசினார் பவன் கல்யாண்.
“அரசியல் ரீதியாக நான் இந்தியா முழுவதும் பிரபலமாக இருக்கலாம். ஆனால், நடிகராக எனது பிரபலம் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் மற்ற நடிகர்களை விடவும் குறைவுதான். எனது படங்களின் வியாபாரம் ஒப்பீட்டில் குறைவாகவே இருக்கும். அதனால்தான் இந்தப் படத்திற்கு ஆதரவு தர வேண்டும் என்று யோசித்து இங்கு வந்துள்ளேன்.
இந்தப் படம் பல சிக்கல்களை சந்தித்து வெளியாகிறது. இரண்டு கோவிட்டைக் கடந்தது. சாதி, மதம் பார்க்காமல் இந்தத் திரையுலகம் பலருக்கும் வாய்ப்புகளை வழங்கி வருகிறது. திறமை உள்ள யாரும் வளரலாம். அதனால்தான் சினிமா மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு,” எனப் பேசினார்.

