சுகாதார அமைப்பினரை பாராட்டுகிறேன்; காச நோய் ஒழிப்பு நடவடிக்கையை கண்டு பிரதமர் மோடி பெருமிதம்
சுகாதார அமைப்பினரை பாராட்டுகிறேன்; காச நோய் ஒழிப்பு நடவடிக்கையை கண்டு பிரதமர் மோடி பெருமிதம்
ADDED : நவ 13, 2025 05:40 PM

புதுடில்லி: இந்தியாவில் காச நோய் மிகவும் குறைந்துள்ளது என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. நமது சுகாதார அமைப்பினரை பாராட்டுகிறேன் என பிரதமர் மோடிதெரிவித்துள்ளார்.
'டியூபர்குளோசிஸ் பாக்டீரியா' நுண்கிருமிகளால், காற்றின் மூலம் காசநோய் பரவுகிறது. இது, பொதுவாக நுரையீரலை பாதிக்கும். ஆனாலும், மூளை, சிறுநீரகம், முதுகெலும்பு ஆகிய உடலின் மற்ற பாகங்களையும் பாதிக்கிறது. இந்தியாவில் அதிகமாக காணப்பட்ட காச நோய் பாதிப்பு குறைந்துள்ளது என உலக சுகாதார மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
காசநோய் ஒழிப்பு
இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது: காசநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம் குறிப்பிடத்தக்க வேகத்தை அடைந்து வருகிறது. சமீபத்திய உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள உலகளாவிய காசநோய் அறிக்கையில்,இந்தியாவில் காசநோய் பாதிப்பு பாராட்டத்தக்க அளவில் குறைந்துள்ளது, இது உலகளாவிய சரிவு விகிதத்தை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ சிகிச்சைக்காக வழங்கப்படும் காப்பீடுகள் காசநோய் பாதிப்பு குறைவிற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வெற்றியை அடைய உழைத்த சுகாதார அமைப்பினரை பாராட்டுகிறேன் நான் பாராட்டுகிறேன். ஆரோக்கியமான இந்தியாவை உறுதி செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

