sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நான் அதே தண்ணீரைத் தான் குடிக்கிறேன்; ஆம் ஆத்மி குற்றச்சாட்டிற்கு மோடி பதிலடி

/

நான் அதே தண்ணீரைத் தான் குடிக்கிறேன்; ஆம் ஆத்மி குற்றச்சாட்டிற்கு மோடி பதிலடி

நான் அதே தண்ணீரைத் தான் குடிக்கிறேன்; ஆம் ஆத்மி குற்றச்சாட்டிற்கு மோடி பதிலடி

நான் அதே தண்ணீரைத் தான் குடிக்கிறேன்; ஆம் ஆத்மி குற்றச்சாட்டிற்கு மோடி பதிலடி

11


UPDATED : ஜன 29, 2025 03:34 PM

ADDED : ஜன 29, 2025 03:30 PM

Google News

UPDATED : ஜன 29, 2025 03:34 PM ADDED : ஜன 29, 2025 03:30 PM

11


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: நான் அதே தண்ணீரைத் தான் குடிக்கிறேன், ஹரியானா பா.ஜ., எனக்கு விஷம் கொடுக்குமா? என ஆம்ஆத்மி குற்றச்சாட்டிற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்தார்.

டில்லியில் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: பா.ஜ., அரசு ஆயிரக்கணக்கான மக்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுக்கிறது. எனக்கு சொந்த வீடு இல்லை. ஆனால் ஒவ்வொரு ஏழைக்கும் சொந்த வீடு இருக்க வேண்டும் என்பதே எனது கனவு. கண்ணாடி அரண்மனை கட்டி பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பணம் பறிப்பவர்களால் ஏழைகளின் வீட்டைப் பற்றி சிந்திக்கவே முடியாது.

பொய் குற்றச்சாட்டு

டில்லிக்கு வரும் தண்ணீரில் ஹரியானா மக்கள் விஷம் கலக்கிறார்கள் என்று ஆம் ஆத்மி கட்சியினர் கூறுகிறார்கள். இது ஹரியானாவுக்கு மட்டுமல்ல, இந்தியர்களுக்குமான அவமானம். தண்ணீர் கொடுப்பதை புனிதமாக கருதும் நாடு இது. இந்த நாட்டு மக்கள் மீது இப்படி ஒரு பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர். இப்படி முட்டாள்தனமாக பேசுபவர்களுக்கு இந்த முறை டில்லி மக்கள் பாடம் கற்று கொடுப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.

இது தவறானது!

டில்லியின் முன்னாள் முதல்வர் ஒருவர் ஹரியானா மக்கள் மீது கேவலமான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.

தோல்வி பயத்தில் ஆம்ஆத்மி உள்ளது. ஹரியானா மக்களின் குழந்தைகள், குடும்பத்தினர், உறவினர்கள் டில்லியில் வசிக்க வேண்டாமா? ஹரியானா மக்கள் தங்கள் சொந்த குழந்தைகளின் தண்ணீரில் விஷம் கலக்க முடியுமா? நான் அதே தண்ணீரை தான் குடிக்கிறேன். நீதிபதிகள் மற்றும் அரசியல்வாதிகள் அனைவரும் ஒரே தண்ணீரை தான் குடிக்கிறார்கள். ஹரியானா மக்கள் தண்ணீரில் விஷம் கலந்திருப்பதாக நினைப்பது தவறானது.

சுத்தமான குடிநீர்

தவறுகளை மன்னிப்பது இந்திய குடிமக்களின் தாராள குணம்.இவர்கள் யமுனையை சுத்தம் செய்கிறோம் என்ற பெயரில் மூன்று தேர்தல்களில் ஓட்டு கேட்டனர். ஆனால் இதுவரை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. நாங்கள் திட்டங்களை நிறுத்துபவர்கள் அல்ல. திட்டங்களுக்கு உத்வேகம் கொடுப்பவர்கள்.இந்தியாவின் தொலைதூர கிராமங்களில் உள்ள ஏழை, எளியவர்களின் வீடுகளுக்குக் குடிநீர் சென்றடையும். டில்லியில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சுத்தமான குடிநீரை பா.ஜ.,அரசால் வழங்க முடியும்.

11 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள பணிகளை முடித்து, வரும் 30 ஆண்டுகளுக்கான முன்னேற்பாடுகளையும் செய்ய வேண்டும். அதனால்தான் டில்லி மக்களிடம் நான் வலியுறுத்த விரும்புகிறேன். டில்லிக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பு கொடுங்கள். நாடு முழுவதும் என்னால் நிறைய செய்ய முடிந்தது. ஆனால், டில்லியில் பணியாற்ற நீங்கள் எனக்கு வாய்ப்பளிக்கவில்லை. நீங்கள் 25 ஆண்டுகளாக காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆட்சியை பார்த்திருக்கிறீர்கள்.

இப்போது பா. ஜ., வுக்கு ஓட்டளியுங்கள். சேவை செய்ய எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். சிலர் 14 ஆண்டுகள், சிலர் 11 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். இன்னும், அதே போக்குவரத்து நெரிசல், அதே அசுத்தம், அதே உடைந்த சாலைகள் காணப்படுகின்றன. மக்கள் குடிநீருக்காக ஏங்குகிறார்கள். டில்லியின் கோடிக்கணக்கான குடிமக்கள் ஒவ்வொரு நாளும் காலையிலும், மாலையிலும் தங்கள் வலியை வெளிப்படுத்துகிறார்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.






      Dinamalar
      Follow us