
கடந்த
21 ஆண்டுகளாக அரசியலில் உள்ளேன். என்னை சுயபரிசோதனை செய்ததில், இதர
பிற்படுத்தப்பட்டோரை பாதுகாப்பதில் நான் தவறிழைத்துவிட்டேன். நாடு முழுதும்
15 ஆண்டுகளுக்கு முன் ஜாதிவாரி கணக்கெடுப்பை முன்னெடுத்து இருக்க
வேண்டும். தெலுங்கானா காங்கிரஸ் அரசு முன் உதாரணமாக திகழ்கிறது.
ராகுல் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், காங்கிரஸ்
வரவேற்பு!
அரசியலமைப்பின் முகவுரையில் மதசார்பின்மை என்ற வார்த்தையை நீக்கும் எந்த நோக்கமும் இல்லை எனவும், அதுபற்றி பரிசீலிக்கவும் இல்லை எனவும் மத்திய அரசு தெளிவுப்படுத்தியதை வரவேற்கிறோம். இந்த விவகாரத்தில், வெளிப்புற அழுத்தங்களுக்கு இடமளிக்காமல் மத்திய அரசு தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும்.
மாயாவதி தலைவர், பகுஜன் சமாஜ்
முதன்மை நோக்கம்!
தலைமை தேர்தல் கமிஷனின் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் தொடர்பான நடவடிக்கை பற்றி, பார்லிமென்டில் விவாதிப்பதே எங்கள் கட்சியின் முதன்மை நோக்கம். தகுதி வாய்ந்த வாக்காளர்கள் நீக்கப்படுவதை தடுக்கவே, இந்நடவடிக்கையை எதிர்க்கிறோம். தேர்தல் கமிஷன் அலுவலகத்தை முற்றுகையிட திட்டமிட்டுள்ளோம்.
டெரெக் ஓ பிரையன் ராஜ்யசபா எம்.பி., திரிணமுல் காங்கிரஸ்