ADDED : நவ 30, 2024 12:07 AM

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தால் எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி.,யினரின் ஓட்டுகள் வீணாகின்றன. இந்த இயந்திரத்தை பா.ஜ.,வினர் எடுத்துச் சென்று தங்கள் வீட்டில் வைத்துக்கொள்ளட்டும். அடுத்த ஆண்டு பீஹார் சட்டசபை தேர்தலில் ஓட்டுச்சீட்டு முறையை பயன்படுத்த வேண்டும்.
லாலு பிரசாத் யாதவ், தலைவர், ராஷ்ட்ரீய ஜனதா தளம்
மக்கள் நலன் எங்கே?
டில்லியில் ஆயுஷ்மான் பாரத் எனும் இலவச மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்தாமல் ஆம் ஆத்மி அரசு உள்ளது. தன் அரசியல் நலன் கருதி, மக்கள் நலனை தியாகம் செய்து வருகிறது. ஆம் ஆத்மி அரசின் இந்த நடவடிக்கை வியப்பளிப்பதாக டில்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
பன்சுரி சுவராஜ், லோக்சபா எம்.பி., - பா.ஜ.,
சுயமரியாதை இல்லை!
அஜித் பவாரும், ஏக்நாத் ஷிண்டேவும் சுயமரியாதை பற்றி பேசுகின்றனர். மஹாராஷ்டிரா அரசியல் பிரச்னை குறித்து முடிவு எடுக்க, இருவரும் டில்லி சென்று மோடி, அமித் ஷாவின் ஆலோசனையை கேட்கின்றனர். கட்சி தலைவர்களான இவர்களிடமே முதலில் சுயமரியாதை இல்லை.
சஞ்சய் ராவத், ராஜ்யசபா எம்.பி., - சிவசேனா உத்தவ் அணி

