தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/இந்தியா/ பா.ஜ.,விற்கு வேலை செய்யும் 'ஐ-பேக்!'

பா.ஜ.,விற்கு வேலை செய்யும் 'ஐ-பேக்!'

பா.ஜ.,விற்கு வேலை செய்யும் 'ஐ-பேக்!'

8


ADDED : ஏப் 26, 2026 12:50 AM

Follow on GoogleFavourite on Google

8

ADDED : ஏப் 26, 2026 12:50 AM


8
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொல்கட்டா: திரிணமுல் காங்கிரசுக்கு, தேர்தல் திட்டங்களை தயாரித்து வழங்குவது, பிரசார உத்திகளை வகுப்பது, வேட்பாளர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை ஆராய்வது, மம்தாவின் திட்டங்களுக்கு மக்களின் ஆதரவு உண்டா என, அனைத்தையும் கவனிப்பது, 'ஐ-பேக்' என்ற தேர்தல் ஆலோசனை நிறுவனம்.

இந்த நிறுவனம் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளது என்று புகார் வரவே, அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது. இதன் இயக்குநர்கள் கைது செய்யப்பட்டனர்; இதையடுத்து இந்த நிறுவனம் இப்போது மூடப்பட்டுள்ளது.

இந்த ரெய்டின் போது, ஐ-பேக் அலுவலகத்திற்குள் சென்று, சில ஆவணங்களை துாக்கி சென்று விட்டார் மம்தா; இதை எதிர்த்து, அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. 'முதல்வரே இப்படி செய்தால் எப்படி ஜனநாயகம் தழைக்கும்?' என, மம்தாவின் நடவடிக்கைக்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.

ஐ- பேக் மீது உள்ள குற்றச்சாட்டு, நிலக்கரி கடத்தல் வழக்காகும். ரெய்டை அடுத்து, சில ஊழியர்களுக்கு தொடர்ந்து சம்மன் அனுப்பி வந்தது அமலாக்கத்துறை; இதனால் அலுவலகம் மூடப்பட்டது. ஆனாலும், ஐ-பேக், திரிணமுலுக்கு ஆதரவு அளிக்கும் என்று சொல்லப்பட்டது.

இந்நிலையில், ஐ-பேக் ஊழியர்கள் பலர், பா.ஜ.,வுக்காக தேர்தல் ஆலோசனை வழங்கி வரும் நிறுவனங்களுக்கு, தேர்தல் பணியாற்ற தொடங்கி விட்டனர்; இது மம்தாவை சிக்கலில் ஆழ்த்தியுள்ளது.

'ஐ-பேக்கில் தான் திரிணமுலின் ஊழல் பணம் உள்ளது; அதன் வாயிலாக தான், தேர்தலுக்கான செலவுகள் மேற்கொள்ளப்படுகின்றன' என்று ஒரு பேச்சும் உள்ளது. இப்போது, ஐ-பேக்கின் பல ஊழியர்கள், பா.ஜ., சார்பு அமைப்புகளுக்கு சென்றுவிட்டதால், திரிணமுல் விவகாரங்களை, இவர்கள் போட்டுக் கொடுத்து விடுவர் என்று மம்தா அஞ்சுகிறாராம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us