ADDED : ஜன 30, 2025 11:58 PM

யமுனை நதியில் விஷம் கலந்ததாக பொய் பிரசாரம் செய்த அரவிந்த் கெஜ்ரிவால், டில்லி - ஹரியானா மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும். மத்திய அரசிடம் இருந்து 8,500 கோடி ரூபாய் நிதி பெற்றும், நதியை சுத்தம் செய்யும் எந்த பணியையும் டில்லி அரசு செய்யவில்லை.
ஜே.பி.நட்டா,தேசிய தலைவர், பா.ஜ.,
பணம் பறிக்க வேண்டாம்!
தேசியவாத காங்., தொண்டர்கள் யாரையும் ஏமாற்றி பணம் பறிக்க வேண்டாம். நிர்வாக பணிகளில் எந்த அரசியல் தலையீட்டையும் பொறுத்துக்கொள்ள முடியாது. தவறானநபர்களுடன் பழகாமல் கவனமுடன் இருக்க வேண்டும். மக்களிடையே நம் பிம்பம் நன்றாக இருத்தல் அவசியம்.
அஜித் பவார், மஹாராஷ்டிர துணை முதல்வர், தேசியவாத காங்.,
பிரச்னை தீராது!
தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அதிகாரத்தில் நியாயமான பங்கு வழங்கும் வரை, அவர்களின் பிரச்னைகள் தீர்க்கப்படாது. எந்த துறையாக இருந்தாலும் அவர்களுக்கு அதிகாரத்தில் உரிய பங்களிப்பு தரப்பட வேண்டும்.
ராகுல்,லோக்சபா எதிர்க்கட்சித்தலைவர், காங்.,

