நான் சொர்க்கத்தை அடைய விரும்புகிறேன்: டிரம்ப் 'பளிச்'
நான் சொர்க்கத்தை அடைய விரும்புகிறேன்: டிரம்ப் 'பளிச்'
ADDED : ஆக 20, 2025 07:41 AM

வாஷிங்டன்:'உக்ரைனில் அமைதியை நிலைநாட்ட மத்தியஸ்தம் செய்வது சொர்க்கத்திற்கு செல்ல உதவும். நான் சொர்க்கத்தை அடைய விரும்புகிறேன்' என அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நிருபர்களிடம் டிரம்ப் கூறியதாவது: உயிர்களை காப்பாற்றுவதே இறுதி இலட்சியம். முடிந்தால் நான் சொர்க்கத்திற்கு செல்ல முயற்சிக்க விரும்புகிறேன். உக்ரைனில் அமைதியை நிலைநாட்ட மத்தியஸ்தம் செய்வது சொர்க்கத்திற்கு செல்ல உதவும்.
உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் ஒரு வாரத்திற்கு 7 ஆயிரம் பேர் கொல்லப்படுவதை தடுக்க முடிந்தால் அது மிகவும் நல்ல விஷயம் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் அமெரிக்க மக்கள் உயிரை இழக்கவில்லை. அமெரிக்க வீரர்களை இழக்கவில்லை. ஆனால் உங்களுக்கு தெரியும்.
ஏவுகணைகள் தவறான இடங்களை தாக்கும் போதோ, உக்ரைனில் பல்வேறு நகரங்களில் வீசப்படும் போதோ, ரஷ்ய மற்றும் உக்ரைன் மக்கள் சிலரை இழக்கிறோம். இவ்வாறு அமெரிக்க அதிபர் கூறினார்