என் கடைசி மூச்சு உள்ள வரை அரசியலில் இருப்பேன்: தேவகவுடா
என் கடைசி மூச்சு உள்ள வரை அரசியலில் இருப்பேன்: தேவகவுடா
ADDED : நவ 09, 2024 02:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: என் கடைசி மூச்சு உள்ள வரை அரசியலில் இருப்பேன் என மதசார்பற்ற ஜனதா தள கட்சி மூத்த தலைவரும் முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்தார்.
கர்நாடகாவில் சென்னப்பட்டணம் சட்டசபை தொகுதிக்கு வரும் 13-ல் இடைத்தேர்தல் நடக்கிறது. இத்தொகுதியில் தேவகவுடா தன் பேரன் நிகில் குமாரசாமியை வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். இங்கு பிரசாரம் செய்ய வந்துள்ள தேவகவுடா கூறியது,
மத்தியில் பிரதம ர் மோடி சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார். ஆனால் கர்நாடகாவில் ஒரு மோசமான ஆட்சியை காங்கிரஸ் நடத்தி வருகிறது. இது போன்ற ஒரு மோசமான ஆட்சியை நான் பார்த்ததே இல்லை. இந்த ஆட்சியை அகற்றும் வரை ஒயமாட்டேன். எனக்கு 92 வயதாகிறது. 62 ஆண்டுகள் தீவிர அரசியலில் இருந்து வருகிறேன். என் கடைசி மூச்சு உள்ளவரை தீவிர அரசியலில் இருப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.