sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ராமர் கோவிலுக்கு நான் செல்வேன்: அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர்

/

ராமர் கோவிலுக்கு நான் செல்வேன்: அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர்

ராமர் கோவிலுக்கு நான் செல்வேன்: அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர்

ராமர் கோவிலுக்கு நான் செல்வேன்: அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர்


ADDED : ஜன 18, 2024 05:11 AM

Google News

ADDED : ஜன 18, 2024 05:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுப்பி: “தனிப்பட்ட முறையில், நான் ராம பக்தை. ராமர்கோவில் கட்ட நான் நன்கொடை கொடுத்துள்ளேன். என்றாவது ஒருநாள் நான் ராமர் கோவிலுக்குச் செல்வேன்,” என, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் தெரிவித்தார்.

உடுப்பியில் நேற்று அவர் கூறியதாவது:

ராமர், கிருஷ்ணர், பரவேஸ்வரர் மீது எனக்கு அபார பக்தி உள்ளது. ராமர் கோவில் பா.ஜ.,வினருக்கு மட்டும் சொந்தமானது அல்ல. அதே போன்று காங்கிரசாருடையதும் அல்ல. நாட்டின் 140 கோடி மக்களுக்கு சொந்தமானது.

எனக்கு பக்தி இருப்பதால், கோவிலுக்கு செல்வேன். ராமர் கோவில் விஷயத்தில், பா.ஜ., அரசியல் செய்கிறது. ஆனால் இது லோக்சபா தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது.

தனிப்பட்ட முறையில், நான் ராம பக்தை. ராமர்கோவில் கட்ட நான் நன்கொடை கொடுத்துள்ளேன். என்றாவது ஒருநாள் நான் ராமர் கோவிலுக்கு செல்வேன்.

லோக்சபா தேர்தலில், அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றால், சித்தராமையா ஐந்து ஆண்டுகள் முதல்வராக நீடிப்பார் என, எதீந்திரா என்ன காரணத்துக்காக கூறினார் என்பது தெரியவில்லை. காங்கிரசில் கூட்டுத் தலைமையில் லோக்சபா தேர்தலை சந்திப்போம். அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவது, அனைவரின் பொறுப்பாகும்.

மாநிலத்துக்கு நிரந்தரமாக அநியாயம் நடக்கிறது. ஜி.எஸ்.டி.,யில் பங்கு கொடுப்பது, வறட்சி நிவாரணம் வழங்குவது, குடியரசு தின ஊர்வலத்தில், கர்நாடக அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்குவது என, தொடர்ந்து அநியாயம் நடக்கிறது. எனவே லோக்சபா தேர்தலில் நாங்களே வெற்றி பெறுவோம்.

முதல்வர் சித்தராமையாவை, பா.ஜ., - எம்.பி., அனந்தகுமார் ஹெக்டே ஒருமையில் பேசியதை, யாரும் சகிக்கமாட்டார்கள். உத்தரகன்னடா லோக்சபா தொகுதியின் எல்லையில் உள்ள கானாபுரா, என் கணவரின் வீடாகும். எனவே எனக்கு அந்த தொகுதியை பற்றி நன்றாக தெரியும். அனந்தகுமார் ஹெக்டே, நான்கரை ஆண்டுகளாக காணாமல் போயிருந்தார். தேர்தல் வருவதால் சர்ச்சைக்குரிய வகையில் பேசுகிறார். அவர் எப்போதும் இதே போன்று அரசியல் செய்கிறார்.

உடுப்பி நகரின் வளர்ச்சிக்காக, 30 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் பணிகள் நடக்கின்றன.

இவ்வாறு அவர்கூறினார்.






      Dinamalar
      Follow us