ADDED : டிச 03, 2024 09:11 PM

புதுடில்லி: காற்று மாசுபாடு காரணமாக எனக்கு டில்லிக்கு வர விருப்பமில்லை என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.
தலைநகர் டில்லியில் ஏ.க்யூ.ஐ., எனப்படும் காற்றின் தரக்குறியீடு கடந்த சில ஆண்டுகளாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, குளிர் காலங்களில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு காரணமாக குழந்தைகள், பெரியவர்கள் உள்ளிட்டோர் மூச்சுத்திணறல், ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களுக்கு ஆளாகின்றனர்.
இதனை கட்டுப்படுத்த 21 அம்ச செயல்திட்டத்தை மாநில அரசு நடவடிக்கைகளை எடுக்கிறது இருப்பினும், தலைநகர் டில்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்நிலையில் மஹாராஷ்டிராவின் நாக்பூர் லோக்சபா எம்.பி.,யும் , மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி நிகழ்ச்சி ஒன்றில் கூறியது, டில்லி வர எனக்கு விருப்பம் இல்லை. காரணம் காற்று மாசு அதிகரிப்பே. ஒவ்வொரு முறையும் தலைநகர் டில்லி வரும் போதெல்லாம் எனக்கு தொற்று பாதிப்பு, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது என்றார்.