sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நான் அச்சுறுத்தலுக்கு அடிபணிய மாட்டேன்: தலைமை நீதிபதி அதிரடி

/

நான் அச்சுறுத்தலுக்கு அடிபணிய மாட்டேன்: தலைமை நீதிபதி அதிரடி

நான் அச்சுறுத்தலுக்கு அடிபணிய மாட்டேன்: தலைமை நீதிபதி அதிரடி

நான் அச்சுறுத்தலுக்கு அடிபணிய மாட்டேன்: தலைமை நீதிபதி அதிரடி

19


ADDED : டிச 13, 2025 12:38 AM

Google News

ADDED : டிச 13, 2025 12:38 AM

19


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ''நான், அச்சுறுத்தலுக்கு அடிபணிய மாட்டேன். என்னிடம் அது நடக்காது,” என தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்துள்ளார்.

ரோஹிங்கியா அகதிகள் தொடர்பான வழக்கை சமீபத்தில் விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, 'இந்தியாவில் ரோஹிங்கியா அகதிகளுக்கு சிவப்பு கம்பளம் விரிக்க முடியாது' என ஆவேசமாக தெரிவித்தது. இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மற்றொரு தரப்பினர் ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் நேற்று நடந்த ஒரு வழக்கு விசாரணையின் போது, தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறுகையில், “நீதிமன்றத்தில் சில நேரங்களில் எதிர்பாராத சூழ்நிலைகள் உருவாகும். நாங்கள் சில கருத்துக்களை தெரிவிக்கிறோம்.

நீதிபதி ஒரு கருத்தைக் கூறியவுடனேயே, அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. ஆனால் நான், அச்சுறுத்தலுக்கு அடிபணிய மாட்டேன். என்னிடம் அது நடக்காது,” என்றார்.






      Dinamalar
      Follow us