ADDED : பிப் 02, 2024 11:24 PM

அசாமில் ராகுல் பாதயாத்திரை சென்ற பெரும்பாலான வழிகளில் மக்களை சந்தித்தது ராகுலே கிடையாது; அவரை போன்றே தோற்றம் உடைய நபரை பயன்படுத்தி இருக்கின்றனர். இதை மீண்டும் திட்டவட்டமாக கூறுகிறேன். பிரதமர் அசாமில் இருந்து சென்றதும் இதை நிரூபிப்பேன்.
ஹிமந்த பிஸ்வ சர்மா, அசாம் முதல்வர், பா.ஜ.,
உள்துறையின் பொறுப்பு!
கிழக்கு லடாக்கில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற இந்தியர்களை, சீன வீரர்கள் தடுத்து நிறுத்தி உள்ளனர். இந்திய பகுதிக்குள் இந்தியர்களுக்கு கால்நடை மேய்க்கும் உரிமைகளை உறுதி செய்வது, உள்துறை அமைச்சகத்தின் பொறுப்பு.
ஜெய்ராம் ரமேஷ், ராஜ்யசபா எம்.பி. காங்.,
அபார வெற்றி உறுதி!
உத்தர பிரதேசத்தில் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீடு ஏறக்குறைய முடிந்துவிட்டது. அது குறித்த தகவலை விரைவில் வெளியிடுவோம். வரும் லோக்சபா தேர்தலில், எங்கள் கூட்டணி அபார வெற்றி பெறும்.
ராம் கோபால் யாதவ் பொதுச்செயலர், சமாஜ்வாதி கட்சி

