ADDED : மார் 04, 2024 12:38 AM

மதுரா தொகுதியில் போட்டியிட மூன்றாவது முறையாக வாய்ப்பளித்த பா.ஜ., தலைமைக்கு நன்றி. எம்.பி.,யாக கடந்த இரண்டு முறையும் மதுராவுக்கு நிறைய விஷயங்களை செய்துள்ளேன். மூன்றாவது முறை அதை விட அதிக பணிகள் செய்து, மதுராவின் நிலையை உயர்த்துவேன்.
ஹேமமாலினி
லோக்சபா எம்.பி., - பா.ஜ.,
ஏழை மக்கள் பாவம்!
ரயில்வேயின் திட்டங்கள் அனைத்தும் பணக்காரர்களுக்காக மட்டுமே செயல்படுத்தப்படுகின்றன. ஏழைகள், நடுத்தர மக்கள் பயணம் செய்யும் பொது பெட்டி கள், 'ஏசி' பெட்டிகளாக மாற்றப்படுகின்றன.
ராகுல்
லோக்சபா எம்.பி.,
காங்.,
ஆட்சியில் நீடிப்பது கடினம்!
ஹிமாச்சலில் காங்கிரஸ் ஆட்சியில் நீடிப்பது கடினம். அமைச்சர்களே கேபினட் கூட்டத்தை புறக்கணிக்கின்றனர். ஒன்பது எம்.எல்.ஏ.,க்கள் ஆட்சிக்கு எதிராக இருப்பதால், ஆட்சியில் நீடிக்கும் தார்மீக பொறுப்பை காங்., இழந்துவிட்டது.
ஜெய்ராம் தாக்குர்
ஹிமாச்சல் எதிர்க்கட்சி
தலைவர், பா.ஜ.,

