sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

குடும்ப உறுப்பினர் போல கவனித்துக் கொள்வேன் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி உருக்கம்

/

குடும்ப உறுப்பினர் போல கவனித்துக் கொள்வேன் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி உருக்கம்

குடும்ப உறுப்பினர் போல கவனித்துக் கொள்வேன் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி உருக்கம்

குடும்ப உறுப்பினர் போல கவனித்துக் கொள்வேன் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி உருக்கம்


ADDED : ஜன 29, 2025 08:22 PM

Google News

ADDED : ஜன 29, 2025 08:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:“சட்டசபைத் தேர்தலில் தோல்வியை உணர்ந்த ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் விரக்தியில் யமுனையில் நச்சு கலக்கப்படுவதாக அவதூறு பரப்பி வருகிறார்,”என, பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

டில்லி சட்டசபைத் தேர்தல் பிப்ரவரி 5ம் தேதி நடக்கிறது. தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி நடத்தும் ஆம் ஆத்மி மற்றும் ஆட்சியைக் கைப்பற்றத் துடிக்கும் பா.ஜ., ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியும் தனித்து களம் இறங்கி, 70 தொகுதிகளிலும் தீவிர பிரசாரம் செய்து வருகிறது.

யமுன கதரில் நேற்று நடந்த பா.ஜ., பொதுக்கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

அரசு பங்களாவில் கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து அரண்மனை போல மாற்றி வாழ்ந்த அரவிந்த் கெஜ்ரிவால், ஏழைகளின் நலனைப் பற்றி யோசிக்கவே முடியாது. ஆம் ஆத்மி கட்சி தேர்தலில் தன் தோல்வியை உணர்ந்து விட்டது. அதனால்தான் அதன் தலைவர்கள் டில்லி மக்களிடம் பொய்களைப் பரப்புகின்றனர்.

சார்லஸ் சோப்ராஜ் பற்றி அறிந்திருப்பீர்கள். அப்பாவித்தனமான முகத்துடன் தொடர் கொலைகளை செய்து புகழ் பெற்றவர். ஏமாற்றுவதில் மிகவும் திறமையானவர். சார்லஸ் சோப்ராஜ் போன்ற ஆம் ஆத்மி தலைவர்களிடம் டில்லி மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

டில்லியின் பேரழிவான ஆம் ஆத்மி அரசின் போலி வாக்குறுதிகள் மற்றும் பொய்கள் டில்லி மக்களிடம் எடுபடாது. டில்லி மக்களுக்கு சேவை செய்ய 25 ஆண்டுகளுக்குப் பின், பா.ஜ.,வுக்கு மீண்டும் டில்லி மக்கள் வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

கடந்த 2015 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டசபைத் தேர்தல்களிலும், யமுனை நதியை சுத்தம் செய்வதாக ஆம் ஆத்மி வாக்குறுதி அளித்தது. ஆனால், யமுனை நதி இன்னும் பல மடங்கு மோசமாகத்தான் மாறியிருக்கிறது. இந்த தேர்தலிலும் அதே வாக்குறுதியை கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

இது டில்லி மக்களுக்கு செய்த மோசடி. ஏற்கனவே அளித்த வாக்குறுதியை 10 ஆண்டுகளாக நிறைவேற்றாமல், அடுத்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றுவதாக வெட்கமில்லாமல் அறிவித்துள்ளார். டில்லி மக்கள் குடிநீருக்காக தவிக்கின்றனர்.

வரலாறும் நாடும் மறக்க முடியாத ஒரு பாவத்தை ஆம் ஆத்மி செய்துள்ளது. ஹரியானாவில் தொழிற்சாலை கழிவுகளை யமுனை நதியில் கலப்பதாக் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டுகிறார்.

தோல்வி பயத்தில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் விரக்தியடைந்துள்ளனர். ஹரியானா வேறு டில்லி வேறா? ஹரியானா மக்களுக்கு டில்லியில் குழந்தைகளும் உறவினர்களும் இல்லையா? அப்படி இருக்கும்போது, ஹரியானா மக்கள் எப்படி யமுனையில் நச்சை கலப்பர்?

டில்லி மக்கள் குடிக்கும் அதே யமுனை நீரைத்தான் நானும் குடிக்கிறேன். டில்லியில் உள்ள தூதரக அதிகாரிகள், நீதிபதிகளும் கூட ஹரியானாவில் இருந்து வரும் யமுனை நீரைத்தான் குடிக்கின்றனர்.

எனக்கு விஷம் கொடுக்க ஹரியானா பா.ஜ., யமுனை நீரில் நச்சு கலந்து விட்டது என நினைக்க முடியுமா? தவறுகளை மன்னிப்பது இந்தியரின் குணம். ஆனால் டில்லி மக்கள் தவறான நோக்கத்துடன் செய்த பாவங்களை மன்னிக்க மாட்டார்கள்.

இன்று வேலை நாளாக இருந்தாலும், பா.ஜ., பொதுக்கூட்டத்துக்கு இவ்வளவு பேர் திரண்டு வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இது, டில்லி வாக்காளர்களின் மனநிலையை பிரதிபலிக்கிறது. டில்லி மக்கள் இரட்டை இயந்திர அரசை விரும்புகின்றனர் என்பதும் தெளிவாகிறது. தேர்தல் வெற்றிக்குப் பின், டில்லி மாநகரின் வளர்ச்சிப் பணிகள் முடுக்கி விடப்படும்.

தேசிய தலைநகர் நவீனமயமாக்கப்படும். ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் குழாய் பொருத்தப்படும். தண்ணீர் டேங்கர் மாபியாவிலிருந்து மக்கள் விடுவிக்கப்படுவர்.

அனைத்து பிரிவினரும் பயன்பெறும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். பா.ஜ., ஆட்சி அமைந்தவுடன் அனைத்து வாக்குறுதிகளும் அடுத்தடுத்து நிறைவேற்றப்படும். இது மோடியின் உத்தரவாதம்.

இந்த 21ம் நூற்றாண்டில் 25 ஆண்டுகள் கடந்து விட்டன. அதன் முதல் 14 ஆண்டுகள் காங்கிரசும் அடுத்த 11 ஆண்டுகள் ஆம் ஆத்மி-யும் டில்லியை ஆட்சி செய்துள்ளன. ஆனால், டில்லி மாநகரின் முக்கியப் பிரச்னைகள் எதுவுமே தீர்க்கப்படவில்லை. கடந்த 25 ஆண்டுகளாக, இரண்டு தலைமுறைகளை காங்கிரசும், ஆம் ஆத்மியும் அழித்து விட்டன.

டில்லியைப் பொறுத்தவரை யாரோ ஒருவர் 14 ஆண்டுகள் ஆட்சி செய்தார். மற்றொருவர் 11 ஆண்டுகள் ஆட்சி செய்தார் என்ற நிலையில்தான் உள்ளது. போக்குவரத்து நெரிசல், சிதிலம் அடைந்த சாலைகள், குப்பைகள் நிறைந்த தெருக்கள், காற்று மாசு மற்றும் குடிநீர் தட்டுப்பாடு என அனைத்துப் பிரச்னைகளும் அப்படியேதான் இருக்கின்றன. இந்தப் பிரச்னைகளை எல்லாம் தீர்க்க டில்லி மக்கள் பா.ஜ.,வுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

டில்லி மக்கள் பா.ஜ.,வை தேர்வு செய்தால், உங்களை ஒரு குடும்ப உறுப்பினர் போல கவனித்துக் கொள்வேன். உங்கள் கனவு என் கனவாக இருக்கும். உங்கள் கனவுகளை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் செய்வேன். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் பல மாநிலங்களில் பா.ஜ., சாதனை படைத்துள்ளது. டில்லியிலும் அதை செய்யும்.






      Dinamalar
      Follow us